-
ஹழரத் நூஹ் அலைஹிஸ்ஸலாம் அவர்களால் நிர்மாணிக்கப்பட்ட ‘நுஹாவந்த்’ என்றும் ஊரிலிருந்து பிழைப்புத் தேடி வந்து குடியேறிய முஹம்மது இப்னு காஜா ஜுனைதின் மகனாக பக்தாதில் பிறந்தவர்கள் ஜுனைதுல் பக்தாதி(றழி) அவர்கள் . இவர்களின் தந்தை ஒரு சிறு கண்ணாடி கடைவைத்து வாணிபம் செய்து வந்தார். அவர்களின் உறுதுணையாக ஜுனைதுல் பக்தாதி(றழி)அவர்களும் இருந்து வந்தார்கள். ஓய்வு நேரங்களில் அன்னையின் உடன் பிறந்தாராகிய ஸரீ அஸ் ஸகதீ றழியல்லாஹு அன்ஹு அவர்களிடம் மார்க்க கல்வி பயின்று வந்தார்.
தம் மருமகனுக்கு ஏழு வயது நிறம்பப் பெற்ற போது ஹஜ் கடமையை நிறைவேற்ற மக்கா புறப்பட்ட ஸரீ அஸ் ஸகதீ றழியல்லாஹு அன்ஹு அவர்கள் தங்களுடன் தம் மரு மகனையும் அழைத்துச் சென்றனர். மக்காவில் நானூறு அறிஞர்களுக்கு மேற்பட்ட கூட்டம் ஒன்றில் இறைவனுக்கு நன்றி செலுத்துவது என்றால் என்ன வென்பது பற்றிய பிரச்சனை எழுந்த போது,