மரணித்து
நூறுஆண்டுகளுக்குப் பின்
உயிர் பெற்ற அதிசயம்
இஸ்ரவேலர்களுக்கு அல்லாஹூத்தஆலா கணக்கற்ற அருட்பாக்கியங்களை வழங்கியிருந்தான். அல்லாஹ்வின் பேரருட்களுக்கு நன்றி பாராட்டுவதற்குப் பதில் அக்கிரமங்களிலும், பாதகச் செயல்களிலும் கட்டுப்பாடில்லாமல் தொடர்ந்து கொண்டிருந்தனர். இஸ்ரவேலர்களின் நன்றி கெட்ட தனமும், பாதகச் செயல்களும் இறைவனைக் கோபமடையச் செய்தது. அல்லாஹ்வின் கோபத்தின் காரணத்தால் அச்சமுகம் தண்டிக்கப்பட்ட விதங்களில் சிலவற்றை மேலே விபரித்திருந்தோம்.இஸ்ரவேலர்களின் கட்டுக்கடங்காத பாதகச் செயலில் எல்லை தாண்டிச் சென்று கொண்டிருக்கையில் பாபிலோனை ஆட்சி செய்து கொண்டிருந்த புக்து நஸ்று என்ற காபிரான அரசன் இஸ்ரவேலர்கள் வாழ்ந்து கொண்டிருந்த பைத்துல் முகத்தஸ் பக்கம் படையெடுத்துக் கொண்டு வந்தான். இஸ்ரவேலர்கள் அவனது படையை எதிர்த்துப் போராடினர். மூர்க்கமான அவர்களின் தாக்குதல்களுக்கு இவர்களால் ஈடுகொடுக்க முடியவில்லை. இதனால் பாரிய அழிவை இஸ்ரவேலர்கள் சந்தித்தனர்.பாபிலோனியர்களின் மூர்க்கத்தனமான இத்தாக்குதலில் ஒரு இலட்சம் யூதர்கள் கொல்லப்பட்டனர். மற்றும் ஓர் இலட்சம் யூதர்களைக் கைதிகாளகப் பிடித்து அடிமைப்படுத்தி சிற்றரசர்களிடம் இவர்களை ஒப்படைத்து அங்குள்ள மக்களில் தலைக்கு நான்கு நபர்கள் வீதம் பகிர்ந்தளிக்குமாறு கட்டளையிட்டான்.இவ்வாறு கைதிகளாகப் பிடிக்கப்பட்டவர்களுள் ஹஸரத் உஸைர் இப்னு ஷர்க்கியா அலைஹிஸ்ஸலாமும் அடங்குவர். இதன் பின் புக்து நஸ்று என்ற காபிரான அரசன் பைத்துல் முகத்தஸை இடித்தும் அந் நகரத்தையே நாசம் செய்தான்.புக்து நஸ்று என்பவன் யார்.....?அமாலிகா சமுகத்தைச் சேர்ந்த ஒருவன் புக்து நஸ்ரிடத்தில் வாரிசு இல்லாத நிலையில் வந்து சேர்ந்தான். இவன் யார்? இவன் தந்தை பெயர் என்ன? என்பதெல்லாம் யாருக்கும் தெரியாது. இதனால் இவனை புக்து நஸ்று - நஸறின் மகன் என்று அழைக்கலாயினர்.இவன் பெரியவனானதும். கொடுங்கோல் அரசனான புக்து நஸ்ரின் கவணராக பாபிலேனுக்கு நியமிக்கப்பட்டான் பின்னர் இவன் உலகிலேயே கொடுமையான அரசனானான். ஆதாரம் - தப்ஸீர் ஜமல் பாகம் 1 : 212காலம் கொஞ்சம் கடந்த பின் ஹஸரத் உஸைர் அலைஹிஸ்ஸலாம் புக்து நஸ்றின் கைதிகளிலிருந்து விடுதலையானார்கள். பின் ஒரு கழுதையிலேறி தனது நகரமாகிய பைதுல் முகத்திஸூக்கு வந்தார்கள். தனது நகரம் இடிந்து, துவம்சமாகி பாழடைந்து கிடப்பதைக்கண்டு மனம் வெந்து போனார்கள். நகரத்தின் நாலாபக்கமும் சுற்றிப் பார்த்தார்கள். அங்கு மனித வாடையைக் கூடகாணமுடியவில்லை.மனித நடமாட்டம் ஏதும் இல்லாத அந்த நகரத்திலுள்ள மரங்கள் எல்லாம் பழ முதிர்ச் சோலையாக இருந்தன. பழங்களைப் பறித்துத் தின்னக் கூட எவருமில்லை. இக்காட்சி ஹஸரத் உஸைர் அலைஹிஸ்ஸலாம் அவர்களுக்கு மேலும் வேதனையைக் கொடுத்தது. இந்த வேதனையின் வெளிப்பாடாக அவர்கள் வாயிலிருந்து அழிந்து போன இந் நகரத்தை அல்லாஹூத்தஆலா மீண்டும் எப்படிச் செழிப்புறச் செய்வான்? என்று கூறிக் கொண்டு பழங்கள் சிலவற்றைச் சுவைத்தார்கள்.திராட்சையிலிருந்து சாறு புழிந்து அதன் ரசத்தைக் குடித்தார்கள். எஞ்சிய அத்திப் பழத்தை தனது பையிலும், திராட்சைச் சாறை ஒரு கூசாவிலிட்டு, அதன்பின் கழுதையை மரத்தில் கட்டியபின் மரத்தின் நிழலில் சைனித்தார்கள். அல்லாஹூத்தஆலா இதே தூக்கத்;தில் அவர்களின் உயிரைக் கைப்பற்றினான். அல்லாஹூத்தலா இவர்களின் உடலை பறவைகள், மிருகங்கள், மனிதர்கள், ஜின்கள் உள்ளிட்ட எல்லோருடைய பார்வைகளிலிருந்தும் மறைத்து விட்டான்.எழுபது ஆண்டுகள் கடந்த பின் ஈரான் நாட்டு ஓர் அரசன் அங்குள்ள மக்களை பைத்துல் முகத்தஸ் பக்கமாக குடியேற்றி அந் நகரத்தைப் புதுப் பொலிவுடன் கட்டியெழுப்பினான். இக்காலத்தில் கொடுங்கோலனான புக்து நஸ்று என்ற அரசன் இறந்து போனான். இதனால் இஸ்ரவேலர்கள் விடுதலை பெற்றனர். பின் ஆங்காங்கே சிதறிக் கிடந்த யூதர்கள் பைத்துல் முகத்தஸ் பக்கமாக வந்து குடியேறினர். பைத்துல் முகத்தஸ் மக்கள் குடியேறிய பின் திட்டமிட்டு நகர் முன்னரிருந்ததை விட பொலிவுடன் நிர்மாணிக்கப்பட்டது. அக்கம் பக்கம் எங்கும் பழ முதிர்ச் சோலைகள் உருவாக்கப்பட்டன. பைத்துல் முகத்தஸ் நகரம் எல்லாவகையிலும் பொலிவு பெற்று செழித்தோங்கியது. நபி ஹஸரத் உஸைர் அலைஹிஸ்ஸலாம் வபாத்தாகி நூறு ஆண்டுகள் பூர்த்தியானதும் உயிர் பெற்று கண் விழித்துப் பார்த்தார்கள்.ஏறி வந்த கழுதை செத்து அதன் எழும்புகள் யாவும் உக்கியிருப்பதைக் கண்டார்கள். ஆனால் தனது பையில் வைத்த பழங்களும், கூசாவிலுள்ள திராட்சை ரசமும் புத்தம் புதியதாக இருந்தன. தனது தலை முடியையும், தாடியையும் பார்த்தால் அவைகளும் கறுப்பாகவே இருந்தன. தனது உடலில் எதுவித மாற்றமும் இல்லை. நாற்பது வயது கட்டுடல் அப்படியடியே உள்ளது. நபியவர்களுக்கு ஒன்றுமே புரியவில்லை. குழப்பம் அடைந்து யோசித்துக் கொண்டிருக்கும் போது. அல்லாஹூத்தஆலா வஹி அறிவித்தான்.உஸைரே! எத்தனை நாட்களாக உறக்கத்திலிருந்தீர். யோசித்தார் காலையில் உறங்கினேன். எழும்பும் போது அஸர் நேரமாக உள்ளது. அதனால் ஒரு பகல், அல்லது அதைவிடக் குறைவான நேரம் உறங்கியிருப்பேன் என்று பதில் கூறினார்கள். இல்லை! இல்லை!! உசைரே பூரணமாக நூறு ஆண்டுகள் உறங்கிவிட்டீர்! என்று அல்லாஹூத்தஆலா விடை பகர்ந்தான்.எமது ஆற்றலை நீர் நேரில் பார்க்க வேண்டுமாயின் உமது கழுதையைப் பார்! அதன் எலும்புகள் யாவும் உக்கிப் போய்விட்டன. மறுபக்கம் உமது உணவையும் குடிப்பையும் பார்! அவற்றில் எதுவித பங்கமுமில்லை. புத்தம் புதியதாக உள்ளது. மீண்டும் அல்லாஹூத்தஆலா கூறினான்.இறந்து உக்கிப் போன கழுதையை மீண்டும் உயிர்ப்பித்து, எலும்புகள் பொறுத்தப்பட்டு, தோல் சதைகளால் போர்த்தப்பட்டு உயிர் பெற்றெழும் காட்சியைப் பார்! கழுதை உயிர் பெற்றெழுந்து சப்தமிட்டது. உணர்ச்சி மீக்குற்ற ஹஸரத் உஸைர் அலைஹிஸ்ஸலாம் அல்லாஹூத்தஆலா நாடிய அனைத்திலும் ஆற்றல் பெற்றவன் என்பதை உறுதியாக விசுவாசிக்கின்றேன் என்றார்கள்.இதன் பின் நபி ஹஸரத் உஸைர் அலைஹிஸ்ஸலாம் நூறு ஆண்டுகளுக்குப் முன் தான் குடியிருந்த பகுதிக்குச் சென்றார்கள். அறிமுகமான எவரும் காணப்படவில்லை. இவர்களை அடையாளம் காணக்கூடிய எவர்களும் அங்கில்லை. ஒரு வழியில் செல்லும் போது வயது முதிர்ந்த ஒரு மூதாட்டிக் கிழவியை கண்டார்கள். இவர் சிறுவயதாக இருக்கும் போது நபி ஹஸரத் உஸைர் அலைஹிஸ்ஸலாம் அவர்களைக் கண்டுள்ளார்கள். அம் மூதாட்டியை அனுகி இதுதானே உஸைர் நபியின் வீடு? என்று கேட்டதும் ஆமாம் இதுதான் இவர்வீடு அவர் மறைந்து நூறு ஆண்டுகளாயிற்று.அவரைப் பற்றி யாரும் இப்போது பேசுவதில்லை. அவர் எங்குள்ளார் என்ற தகவலும் யாருக்கும் தெரியாது. என்று கூறி கிழவி அழ ஆரம்பித்தாள்.மூதாட்டியே! நான்தான் உஸைர் என்றதும், அக் கிழவி சுப்ஹானல்லாஹ் நீங்கள் உஸைராக எப்படி இருக்க முடியும்.? என்றாள்.மூதாட்டியே! அல்லாஹூத்தஆலா என்னை 100 ஆண்டுகள் மரணிக்கச் செய்தான். பின் என்னையே உயிர்ப்பித்தான். இப்போது எனது வீட்டுக்கு வந்துள்ளேன். என்று நபி ஹஸரத் உஸைர் அலைஹிஸ்ஸலாம் கூறினார்கள்.ஹஸரத் உஸைர் சம்பூரணமானவராக இருந்தார். அவரது எல்லாத் துஆக்களும் அங்கீகரிக்கப் பட்டன. உண்மையில் நீர் உஸையிராக இருப்பின், எனது கண்பார்வை நீங்கி, என் உடற் பலவீனம் நீங்கி என் உடல் கட்டுடல் பெற நீர் துஆச் செய்ய வேண்டும் என்றாள். நபி ஹஸரத் உஸைர் அலைஹிஸ்ஸலாம் அவர்கள் துஆக் கேட்டார்கள். கிழவியின் பார்வை மீண்டது. அவளது பக்க வாதமும் சுகமானது.கிழவி கூர்ந்து நோக்கினாள் நபி ஹஸரத் உஸைர் அலைஹிஸ்ஸலாம் அவர்களை அடையாளம் கண்டாள். நிச்சயமாக நீர் உஸைர்தான் என்பதை நான் சாட்சியம் கூறுகின்றேன் என்று உரத்துக் கூறினாள். பின்னர் அவள் நபி ஹஸரத் உஸைர் அலைஹிஸ்ஸலாம் அவர்களை அழைத்துக் கொண்டு இஸ்ரவேலர்களிடம் சென்றாள். எதிர் பாராத விதமாக அவர்கள் எல்லோரும் ஓரிடத்தில் கூடியிருந்தார்கள். இதே சபையில் நபி ஹஸரத் உஸைர் அலைஹிஸ்ஸலாம் அவர்களின் மகனும் இருந்தார். அப்போது அவருக்கு வயது 118 ஆக இருந்தது. அவருக்கு சில பேரன், பேத்திகள் இருந்தனர். அணைவரும் கிழடாகி விட்டனர்.கிழவி அச் சபைக்குச் சென்று சபையோர்களே! நிச்சயமாக இவர்தான் உஸைர் என்று மெய்யாகவே சாட்சி பகர்கிறேன் என்றாள். கிழவியின் பேச்சை சபையிலிருந்த எவருமே நம்பத்தயாராக இல்லை. சபையிலிருந்த நபி ஹஸரத் உஸைர் அலைஹிஸ்ஸலாம் அவர்களின் மகன் எழுந்து கூறினார். எனது தந்தையின் இரு தோள் பட்டைகளுக்கிடையில் கறுத்த நிறத்தினாலான ஒரு மச்சம் இருந்;தது. அது சந்திரன் போன்று பிரகாசிக்கும் என்றதும் ஹஸரத் உஸைர் அலைஹிஸ்ஸலாம் தனது மேலாடையைக் கழற்றி தனது தோற் பட்டையைக் காட்டினார்கள். அவர்கள் கூறிய படி மச்சம் காணப்பட்டது. அதன் பின் மக்கள் கூறினர்.ஹஸரத் உஸைர் அவர்களுக்கு தௌறாத் வேதம் நன்கு பாடமாக இருந்தது. உன்மையில் நீர் உஸைராக இருப்பின் தௌறாத்தை படித்துக்காட்டும் என்றனர். தங்கு தடையின்றி உடனே தௌறாத்தை ஓதிக்காட்டினார்கள்.கொடுங்கோல் அரசன் பைத்துல் முகத்தஸிற்கு படையெடுத்து அந் நகரத்தை நாசம் செய்த வேளை. தௌறாத்தை மனனம் செய்திருந்தவர்களைத் தேடிக் கண்டுபிடித்து 40 ஆயிரம் அறிஞர்களை கொண்று குவித்தான். அப்போது தௌறாத் எழுதப்பட்ட ஒரு ஏடு கூட இல்லாத அளவிற்கு அழித்தொழித்தான்.ஹஸரத் உஸைர் அவர்கள் ஓதிக்காண்பிக்கும் தௌறாத் உன்மையில் சரியா? தவறா என்பதை எப்படித் தெரிந்து கொள்வது என்பதில் கேள்வி எழுந்தது, அப்போது ஒருவர் எழுந்து புக்து நஸ்று எம்மைக் கைது செய்யும் தினத்தன்று எனது பாட்டனார். தௌறாத் எழுதப்பட்ட ஒரு தோலை ஒரு திராட்சை மரத்தினடியில் புதைத்து வைத்தார். எனது பாட்டனின் திராட்சைத் தோட்டத்தை இனங்கண்டு கூறுவீர்களாயின், தௌறாத் எழுதப்பட்ட அந்த ஏட்டை என்னால் கொண்டு வர முடியும் என்றார். அப்போது அந்த ஏட்டை வைத்து இவர் ஓதுவதை ஒத்துப்பார்த்து இவர் ஓதுவது சரியா? பிழையா? என ஒத்துப்பார்க்க முடியும் என்றார்.மக்கள் அத்திராட்சைத் தோட்டத்தை தேடிக் கண்டுபிடித்து அகழ்வாராய்ச்சி செய்து அந்த ஏட்டைக் கண்டுபிடித்தனர் பின்னர் ஹஸரத் உஸைர் அலைஹிஸ்;ஸலாம் அவர்கள் தௌறாத்தைக் ஓதிக் காண்பித்ததும் ஏட்டில் உள்ளதும் எழுத்துக்கு எழுத்து சரியாக இருந்ததையும் கண்டு மக்கள் வியப்பின் உச்சிக்கே சென்றனர்.விந்தை மிக்க இந் நிகழ்வைக் கண்டவர்கள். ஒத்த குரலில் சந்தேகமில்லாது இவர் உஸைர்தான் என்றும் நிச்சயமாக இவர் அல்லாஹ்வின் குமாரன் என்றும் ஓங்கி ஒலி;த்தனர். இத் தினத்திலிருந்துதான். தப்பான, ஷpர்க்hன கொள்கை யஹூதிகளிடத்தில் பரவ ஆரம்பித்தது. அன்று ஆரம்பித்த இந்த மகா மோசமான அகீதா இன்று வரைக்கும் யஹூதிகளிடம் அசைக்க முடியாத கொள்கைகளாக வேறூன்றி விட்டது. ஹஸரத் உஸைர் அல்லாஹ்வின் குமரர் என்ற தவறான ஷpர்க்கை விட்டும் எம்மைப் பாதுகாப்பானாக!ஆதாரம் – தப்ஸீர் ஜமல் பாகம் -1, பக் -212-215அல்லாஹூத்தஆலா இந் நிகழ்வைப் பற்றி திருமறையில் இவ்வாறு கூறுகிறான்.அல்லது ஒரு கிராமத்தின் மீது சென்றவரைப் போல் (நபியே! நீர் பார்த்திருக்கின்றீரா? அவர்) அ(க் கிராமத்)திலுள்ள (வீடுகளின்) முகடுகள் எல்லாம் இடிந்து (பாழாய்க்)கிடக்க(க் கண்டு) இவ்வூர் (மக்கள் இவ்வாறு அழிந்து) இறந்த பின், அல்லாஹ் இதனை எவ்வாறு உயிர்ப்பிப்பான் என்று கூறினார்;. ஆகவே (அவருடைய சந்தேகத்தை நிவர்த்திக்கும் பொருட்டு) அல்லாஹ் அவரை நூறு ஆண்டுகள் வரையில் மரித்திருக்கச் செய்து, பின்னர் அவரை உயிர்ப்பித்து, (அவரை நோக்கி இந் நிலையில்) என்று கேட்க ஒரு நாள் அல்லது ஒரு நாளின் சிறிது பாகம் இருந்தேன் எனக் கூறினார்.(அதற்கவன்) அன்று! நீர் நூறு வருடங்கள் (இந் நிலையில்) இருந்தீர். (இதோ!) உம்முடைய ஆகாரத்தையும், உம்முடைய பானத்தையும் பாரும் அவை (இது வரை) கெட்டுப் போகவில்லை ஆனால் உம்முடைய கழுதையைப் பாரும் (அது செத்து, உக்கி, எலும்பாகிக் கிடக்கின்றது) இன்னும் உம்மை(ப் போல் சந்தேகிக்கும்) மனிதர்களுக்கு ஓர் அத்தாட்சியாக ஆக்குவதற்காக(க் கழுதையின்) எலும்புகளையும் நீர் பாரும் எவ்வாறு அவைகளைக் கூடாகச் சேர்த்து அதன் மீது மாமிசத்தை அமைக்கின்றோம் என்று கூறி (அவ்வாறே உயிர்ப்பித்துக் காட்டி)னான். (இவை யாவும்) அவர்முன் தெளிவாக நடைபெற்ற போது (அவர்) நிச்சயமாக அல்லாஹ் யாவற்றின் மீதும் மிக்க ஆற்றலுடையோன் என்பதை நான் உறுதியாகக் அறிந்து கொண்டேன் என்று கூறினார். (அல்குர்ஆன் 02:259)படிப்பினை:-01. மேற்கண்ட திருவசனத்தின் மூலம் ஹஸரத் உஸைர் அலைஹிஸ்;ஸலாம் பயணித்த கழுதை இறந்து உக்கிப் போனதையும், ஹஸரத் உஸைர் அலைஹிஸ்;ஸலாம் அவர்களின் புனித உடலும்,அவர்கள் சுவைத்த அத்திப்ழமும் , திராட்சை ரசமும் 100 ஆண்டுகளின் பின் கெட்டுப் போகாமல் அன்று இருந்தது போன்று புத்தம் புதியதாக இருந்ததையும் தெரிந்து கொள்கின்றோம்.
இதன் மூலம் ஒரு மையவாடியில் அடக்கம் செய்யப்பட்டவர்களுள், சிலர் உடல்கள், கபன் துணிகள் அழுக்குப் படாமல் அன்று அடக்கியது போன்று புனிதமாகவும், புதியதாகவும் இருப்பதற்கு சாத்தியம் என்பதற்கு ஹஸரத் உஸைர் அலைஹிஸ்;ஸலாம் அவர்கள் பற்றிய குர்ஆனின் சாட்சியம் தக்க ஆதாரமாகும்.02. பைத்துல் முகத்தஸ் இடித்து தரமாக்கப்பட்டு அந்த நகரம் பாழாக்கப் பட்டதைக்கண்டு ஹஸரத் உஸைர் அலைஹிஸ்;ஸலாம் அவர்கள் கவலையால் தேய்ந்தார்கள். அதி உச்ச கவலை காரணமாக அழிந்து போன இந் நகரத்தை மீண்டும் அல்லாஹூத்தஆலா எப்படிக் கட்டியெழுப்புவானோ? என்று ஏக்கத்துடன் கூறினார்கள். இதிலிருந்து தனது நாட்டையும், ஊரையும் நேசிப்பதும், உறவாக இருப்பதும் ஸாலிஹீன்கள், இறை நேசர்களின் வழி முறையாகும்.செத்த பறவை மீண்டும் உயிர் பெற்றது.கலீலுல்லாஹ் நபி இப்றாஹிம் அலைஹிஸ்ஸலாம் கொடுங்கோலன் நும்றூது மன்னனோடு தர்க்கம் செய்து கொண்டிருக்கையில் ' எனது இரட்சகன் என்னை உயிர்ப்பிக்கவும், மரணிக்கவும் செய்யும் ஆற்றல் பெற்றவன் ' என்று கூறினார்கள். அதற்கு நானும்தான் இந்த ஆற்றலைப் பெற்றுள்ளேன் என்று கூறிய அவன். இரண்டு மனிதர்களை அழைத்து ஒருவரைக் கொன்று விட்டு, மற்றவரை விடுவித்தான். ஒருவரை மரணிக்கச் செய்தேன், மற்றும் மரணிக்க இருந்த ஒருவரை விடுவித்தேன் என்றான்.முட்டாள்த்தனமான நும்றூதின் வாதத்திற்கு எனது இறைவன் இறந்த உடல்களை உயிர்ப்பிப்பவன் என்று பதில் கூறினார்கள். இவ்வாறு உமது றப்பு உயிர்ப்பிப்பதை நீர் நேரில் கண்டீரா? என்று கேட்டான். ஆம் என்று கூற நபி இப்றாஹிம் அலைஹிஸ்ஸலாம் அவர்களால் முடியவில்லை. பின் அல்லாஹ்விடம் கேட்டார்கள்.யா அல்லாஹ்! மரணித்தவர்களை நீ எப்படி உயிர்ப்பிக்கின்றாய்? அதற்கு அல்லாஹ் இதனை நீர்விசுவாசிக்கவில்லையா? என்று நபியவர்களிடம் கேட்டான்.நிச்சயமாக நீ மரணித்தவர்களை உயிர்ப்பிக்கின்றாய் என்பதை நான் அறிவேன். ஆதாரத்தை என் கண் முன் பார்ப்பதனால்; என் மனம் அமைதி பெறும். யாராவது உமது இறைவன் மரணித்தவர்களை உயிர்ப்பிப்பதை நீர் பார்த்தீரா? என்று கேட்டால் ஆம் பார்த்தேன் என்று துணிந்து கூறுவேன் என்றார்கள்.ஹஸரத் ஸஈத் இப்னு ஜூபைர் றழியல்லாஹூ அன்ஹூ கூறுகின்றார்கள்.நபி இப்றாஹிம் அலைஹிஸ்ஸலாம் அவர்களை அல்லாஹூத்தஆலா நண்பனாக தெரிவு செய்த போது, மலக்குல் மௌத் இஸ்றாயீல் அலைஹிஸ்ஸலாம் அவர்கள் இந்த நல்ல செய்தியை நபி இப்றாஹிம் அலைஹிஸ்ஸலாம் அவர்களிடம் தெரிவிக்க அனுமதி கோரினார்கள். இஸ்றாயிலுக்கு அல்லாஹூத்தஆலா அனுமதி வழங்கினான்.மலக்குல் மௌத் நபி இப்றாஹிம் அலைஹிஸ்ஸலாம் அவர்களின் இல்லம் வந்த போது வீட்டில் நபியவர்கள் இருக்கவில்லை. மலக்குல் மௌத் நபியவர்களின் வீட்டுக்குள் புகுந்து உள்ளே இருந்தார்கள்.நபியவர்கள் கதவைத் திறந்து வீட்டுக்குள் நுழைந்ததும் அங்கே ஒருவர் ஏலவே இருப்பதைக் கண்டு யாரிடம் அனுமதி பெற்று வீட்டினுள்ளே புகுந்தீர்? என்று நபி இப்றாஹிம் அலைஹிஸ்ஸலாம் அவரிடம் கேட்டார்கள்.வீட்டின் உரிமையாளன்தான் எனக்கு அனுமதி வழங்கினான். என்று கூறியதும் வந்தவர் மலக்குதான் என்று அடையாளம் கண்டு உன்மைதான் உரைத்தீர்! என்றார்கள். நீங்கள் யார்? என்று நபியவர்கள் கேட்க நான்தான் மலக்குல் மௌத் அல்லாஹூத்தஆலா உங்களை கலீல் (நண்பனாக) தேர்ந்துள்ளான். இந்த நற் செய்தியை உங்களுக்கு நேரில் கூறவே வந்துள்ளேன் என்றார்கள்.அல்லாஹூத்தஆலாவைப் புகழ்ந்த நபியவர்கள் இதற்கான அடையாளம் என்ன? என்று கேட்டார்கள். உமது துஆக்களை அல்லாஹூத்தஆலா அங்கீகரிப்பான். உமது வேண்டுதலின் படி மரணித்தவர்களை உயிர்ப்பிப்பான் என்றார்கள். இதன் பின் அல்லாஹ்விடம் நீ இறந்தவர்களை எப்படி உயிர்ப்பிக்கின்றாய்? என்று கேட்டார்கள்.நீ இது பற்றி விசுவாசங் கொள்ளவில்லையா? என்று அல்லாஹ் கேட்டான். நிச்சயமாக ஏற்றுள்ளேன். ஆயினும் என்னை நீ கலீல் (நண்பன்) ஆக தேர்ந்ததையும் எனது துஆக்களை நீ அங்கீகரிக்கின்றாய் என்பதையும் நேரில் பார்த்து மன அமைதி பெறுவதற்காக என்று பதில் கூறினார்கள்.நான்கு பறவைகளைப் பிடித்து அதனைத் துண்டம் துண்டமாக அரிந்து, ஒன்றோடு ஒன்றைக் கலந்த பின் அவற்றில் கொஞ்சம், கொஞ்சமாக எடுத்து மலையில் வைக்குமாறு அல்லாஹூத்தஆலா கூறினான்.01. கோழி02. புறா (சிலர் காக்கை என்று கூறுகின்றனர்)03. பருந்து (சிலர் கழுகு என்கின்றனர்)04. மயில்ஆகிய நான்கு பறவைகளும் பிடித்து அறுத்து ஒன்றோடு ஒன்றைக் கலந்த பின் இவற்றின் தலைகளை மட்டும் தன்னிடம் வைத்துக் கொண்டு ஏனையவைகளைத் துண்டம் துண்டமாக அரிந்து, கலந்து சில மலைகளில் சிறிது சிறிதாக நபி இப்றாஹிம் அலைஹிஸ்ஸலாம் அவர்கள் வைத்தார்கள். பின் தூரத்திலிருந்து கொண்டு ஒவ்வொரு பறவைகளின் பெயர்களைக் கூறி அழைத்தார்கள்.ஒவ்வொரு பறவையும் அதன் அதன் பாகங்கள் இருந்த இடத்திற்குச் சென்று ஒன்று சேர்ந்து நபியவர்களிடம் விரைந்து வந்து தலையையும் இணைத்துக் கொண்டன. இவை அனைத்தையும் வியந்து பார்த்துக் கொண்டிருந்தார்கள் நபி இப்றாஹிம் அலைஹிஸ்ஸலாம் அவர்கள்.ஆதாரம் -தப்ஸீர் ஜமல் பாகம் 1, பக்கம் 107இந்த நிகழ்ச்சியை அல்லாஹூத்தஆலாதிரு மறையில் இப்படி விபரிக்கின்றான்.அன்றி (நபி இப்றாஹிம் இறைவனை நோக்கி) இறைவனே! நீ இறந்தவர்களை எவ்வாறு உயிர்ப்பிக்கின்றாய்? (அதை) நீ எனக்கு காண்பி எனக் கூறிய போது அவன் (இதை) நீர் நம்பவில்லையா? என்று கேட்டான். (அதற்கு) மெய்தான் நான் (நம்பியே இருக்கின்றேன்) ஆயினும் (அதனை என் கண்ணால் கண்டு) என்னுடைய இருதயம் திருப்தியடையும் பொருட்டு (அதனைக் காண்பி) என அவர் கூறினார். (அதற்கவன்) நான்கு பறவைகளைப் பிடித்து, அவைகளைப் பழக்கி பின்னர் (அவைகளைத் துண்டாடி) அவற்றின் ஒவ்வொரு பாகத்தையும் ஒவ்வொறு மலை மீது வைத்துவிட்டு (மத்தியிலிருந்து கொண்டு ) அவைகளை நீர் கூப்பிடும் அவை உம்மிடம் பறந்து வந்து சேரும். (எனக்கூறி அவ்வாறு செய்து காண்பித்து) நிச்சயமாக அல்லாஹ் வல்லோனும், நுண்ணறிவுமுடையோனுமாக இருக்கின்றான் என்பதை நீர் உறுதியாக அறிந்து கொள்ளும் என்றான். அல்குர்ஆன் (2:260)மரணித்தவர்களை அழைப்பதை சிலர் சிர்க் என்று கூறுகின்றனர். இப்படியானவர்கள் இந் நிகழ்வில் பாடம் கற்க வேண்டும். செத்த சாதாரண பறவைகளை அழைக்கலாமாயின், மரணித்த வலிமார்களை அழைப்பது எப்படித்தப்பாகும?நபி இப்றாஹிம் அலைஹிஸ்ஸலாம் அவர்கள் அறுத்த பறவைகள் ஒவ்வொன்றும் ஒரு மோசமான பண்பைக் கொண்டிருந்தது. சேவல் காம இச்சையும், கழுகு அல்லது பருந்தி;ல் பேராசையும், புறா உயரப்பரப்பதில் மேட்டிமையும்; (பெருமிதமும்) உள்ளன. நான்கு பறவைகளையும் அறுத்ததன் மூலம் மேற்கண்ட நான்கு பறவைகளின் கீழான நான்கு வகைக் குணங்களையும், மனதிலிருந்து அறுத்தல் என்று ஸூபிகள் விளக்கம் பகர்கின்றனர்.செத்த பறவைகள் உயிர் பெற்றெழுந்து வந்ததை கண்ணால் கண்ட போது அவர்கள் கல்பில் அமைதி என்ற பேரொளி தஜல்லியானது. அதனால் முத்மயின்னா என்ற நப்ஸின் உயர் நிலை அவர்களுக்கு கிட்டியது.தனது நப்ஸ் உயிர் பெற்று முத்மயின்னா என்ற உயர் நிலைக்கு உயர வேண்டும். என்று ஆசைப்படுபவர் கோழியை அறுக்க வேண்டும்,அதாவது இச்சையை மனதிலிருந்து அகற்ற வேண்டும். பின் மயிலை அறுக்க வேண்டும், தனது உடல், தோற்றம், அழகு, உடை, அலங்காரம் போன்றவற்றில் தனக்குள் வளரும் கர்வத்தை போக்க வேண்டும்.மேலும் பருந்து அல்லது கழுகை அறுக்க வேண்டும். ஊணில் உள்ள பேராசையை துறக்க வேண்டும். புறாவையும் அறுக்கத்தான் வேண்டும் அதாவது தனது திறமையில் பெரிய தனம் மேட்டினம் கொள்வதை நீக்க வேண்டும். மேற்கண்ட நான்கு இழி குணங்களையும் நீக்கிய பின், தனது மனம் உயிர் பெறும், அதன் பின் தன் மனக் கண்ணால் யாவற்றையும் காண்பான். நப்ஸூமுத்மயின்னா என்ற பாக்கியத்தையும் பெறுவான்.ஆதாரம் – தப்ஸிர் ஜமல் பாகம் 1, பக்கம் 217மேற்க்கண்ட பண்புகளை அகற்றாதவர் உள்ளம் அல்லாஹ்வின் திருக்காட்சியைக் காணும் பாக்கியத்தினால் ஜீவிதம் பெறாது என்று ஆத்மீக ஞானிகள் கூறுகின்றனர்.ஆதாரம் - தப்ஸீர் றூஹூல்பயான்இஸ்ரவேலர்களுக்கு தாலூத் என்பவர் அரசராhகத் தெரிவு செய்யப்பட்டதும், ஜாலூத் என்ற அரக்கத் தனமான அரசனுக்கு எதிராக யுத்தம் செய்ய இஸ்ரவேலர்களை அழைத்தார். இஸ்ரவேலர்கள் அவர் அழைப்பை ஏற்று யுத்த களம் நோக்கி புறப்பட்டனர்.ஜாலூத் என்பவன் அசூர பலமிக்க பராக்கிரமானனாக விளங்கினான். 300 இறாத்தல் எடையுள்ள தலைக் கவசத்தை அவன் அனிந்திருந்தான் என்றால் அவனது பலத்தை கற்பனை செய்து பாருங்கள்! ஜாலூத்தையும், அவனது படையையும் கண்ட இஸ்ரவேலர்கள் அவனுடன் நேருக்கு நேர் யுத்தம் செய்யத் தயங்கினர்.யுத்த களத்தில் இரு அணிகளும் நேருக்கு நேர் அணி வகுத்து நிற்கும் போது, ஜாலூத் மன்னனை கொலை செய்பவருக்கு எனது மகளைத் திருமணம் செய்து தருவதுடன், எனது ஆட்சியில் சரி பாதியையும் தருவதாக வாக்களித்து தனது படையை உற்சாகப் படுத்தினார் தாலூத் மன்னர்..தாவூத் அலைஹிஸ்ஸலாம் அவர்கள் இச் சமயத்தில் நோயுற்று இருந்ததனால் மெலிந்து வெளிறியும் காணப்பட்டார்கள். அத்துடன் வறுமையின் வாட்டமும் அவர் முகத்தில் சோகமாக நிழலாடியது. ஆடு மேய்த்து அதில் வரும் வருமானத்திலேயே அவரது வாழ்க்கை ஓடிக் கொண்டிருந்தது. இந்தப் பின்னணியில்தான் தாவூத் அலைஹிஸ்ஸலாம் அவர்கள் யுத்த களம் சென்றிருந்தார்கள்.தாவூத் அலைஹிஸ்ஸலாம் அவர்கள் யுத்த களம் நோக்கிச் சென்று கொண்டிருக்கையில், வழியில் சில கற்கள் அவருடன் உரையாடின. அதில் ஒரு கல், தாவூதே! நான் நபி மூஸா அலைஹிஸ்ஸலாம் அவர்களின் கல்லாகும். என்னை எடுத்துக் கொள்ளுங்கள் என்றது. இரண்டாம் கல் என்னையும் எடுத்துக் கொள்ளுங்கள் நான் ஹாரூன் நபியின் கல்லாகும் என்றது மூன்றாம் கல் நான்தான் ஜாலூத்தைக் கொல்லுபவன் என்றது. ஹளரத் தாவூத் அலைஹிஸ்ஸலாம் அவர்கள் இம் மூன்று கற்களையும் எடுத்து தனது அங்கியில் வைத்துக் கொண்டார்கள். இந்தப் பின்னணியில் ஹளரத் தாவூத் அலைஹிஸ்ஸலாம் அவர்கள் யுத்த களம் நோக்கிச் சென்றார்கள். அக்கால வழக்கின் படி இரு அணிகளும் நேருக்கு நேர் அணி வகுத்து நின்றன.மன்னர் தாலூத்துடன் நதியைக் கடந்து வந்தவர்களுல் தாவூத் நபியின் தந்தை அய்ஷhவும் ஒருவர், யுத்த களத்திற்கு அவரும், அவருடைய புதல்வர்களும் வந்திருந்தனர். ஜாலூத், தாவூத் அலைஹிஸ்ஸலாம் அவர்கள் மூலமாகத்தான் கொல்லப்படுவான் என்று அல்லாஹூத் தஆலா ஹளரத் அய்ஷh அவர்களுக்கு வஹி அறிவித்தான்.அதனால்தான் நோயுற்ற நிலையிலும் ஹளரத் தாவூத் அலைஹிஸ்ஸலாம் அவர்களை அவரின் தந்தையார் அழைத்துச் சென்றிருந்தார்.ஜாலூத் மன்னன் யுத்த களத்தில் என்னுடன் மோத வருபவர் யார்? என்று வீராப்புடனும், கர்வத்துடனும் அறை கூவல் விடுத்தான்;. தாலூத் அவர்களின் அணியிலிருந்து அவனுடன் பொருத எவரும் செல்லவில்லை. தாலூத் மன்னர் செய்வதறியாது கலங்கியிருந்த போது தாவூத் நபியின் தந்தை அய்ஷh அவர்கள் ஹளரத் தாவூதை அணுகி தாவூதுதான் ஜாலூதைக் கொல்லுவார் என்று இறைவன் வஹி அறிவித்ததாக கூறினார்.தாவூதே! ஜாலூத்தை சொல்ல புறப்படுங்கள், அவ்வாறு நீங்கள் அவனை கொன்றால், எனது மகளை உங்களுக்குத் திருமணம் செய்து வைப்பேன். எனது ஆட்சியில் சரி பாதியையும் தருவேன். என்று தாலூத் வாக்களித்தார். அரசரின் வாக்கை ஏற்றுக் கொண்ட ஹளரத் தாவூத் அலைஹிஸ்ஸலாம் அவர்கள் யுத்த களத்தில் குதிக்கத் தயாரானார்கள். அப்போது குதிரையும் உருக்குச் சட்டையும் வழங்கி வழியனுப்பி வைத்;தார் மன்னர் தாலூத்.இவற்றுடன் யுத்த களத்தை நோக்கிச் சென்று ஜாலூத்தை நெருங்கிய நபியவர்கள். அவனிடம் மோதாமல் மீண்டும் தனது படையணிகளிடம் வந்து குதிரையையும், உருக்குச் சட்டையும், ஆயுதங்களையும் கையளித்து விட்டு அம்பும், கல்லெரியும் பட்டையையும் எடுத்துக் கொண்டு ஜாலூத்தை நோக்கிச் சென்றார்கள்.மன்னன் ஜாலூத் மிக்க வம்பர்களான அமாலிக்கா வர்க்கத்தினரின் தலைவன். மிக்க பலசாளியான இவன் ஓங்கி உயர்ந்து காணப்பட்டான். வாட்ட சாட்டமுள்ள இவனின் தலைக்கவசம் மட்டும் 300 இறாத்தல் எடையுள்ளதாக இருந்தது, யுத்தத்தில் இவனை எதிர்த்து எவரும் வென்றது கிடையாது, தனித்து நின்றே படைகளை விரட்டும் வல்லமை இவனுக்கு இருந்தது, இத்தியாதி பெற்ற ஜாலு{த் ஹளரத் தாவூத் அலைஹிஸ்ஸலாம் அவர்ளை கண்டதும் அவனுக்கு அச்சம் கவ்வியது. ஆயினும்,தன்னை சுதாகரித்துக் கொண்ட அவன் ஹளரத் தாவூத் அலைஹிஸ்ஸலாம் அவர்களை நோக்கி வாலிபா! திரும்பிச் செல்! வீணாக என்னுடம் மோதி உனது உயிரை மாய்த்துக் கொள்ளாதே!ஆதலால் தப்;பினோம், பிழைத்தோம் திரும்பிச் செல் என்று திமிராகப் பேசினான்.ஜாலூத்தின் வேண்டுதலை நிராகரித்த ஹளரத் தாவூத் அலைஹிஸ்ஸலாம் அவர்கள் உன்னை நான்தான் கொல்லுவேன். முடிந்தால் மோதிப்பார்? என்று பதிலுக்க அறைகூவல் விடுத்தார்கள் ஹளரத் தாவூத் அலைஹிஸ்ஸலாம் அவர்கள். பெரும் படைகளை தனித்து நின்று விரட்டிய எனக்கு நாயை விரட்டுவதற்கு போதாத பொடிக்கற்களுடன் என் முன் வந்து நிற்கிறீரே! என்னே உன் தைரியம்.! உனக்கு என் அனுதாபங்கள்.! திரும்பிச் செல்! என்று மீண்டும் கூறினான் ஜாலூத் மன்னன்.நாயை அடிக்கும் கல்லுடன்தான் வந்துள்ளேன் ஏன் தெரியுமா? நீ நாயைவிட தாழ்ந்தவன்தானே! என்று ஹளரத் தாவூத் அலைஹிஸ்ஸலாம் அவர்கள் பதிலுக்கு கூறியதும், ஜாலூத் ஆவேசப்பட்டான். உம்மைக் குத்திக் குதறி உன் உறுப்புக்களை பறவைக்கு இரை போடுவேன் என்று கர்ஜித்தான் ஜாலூத்.ஜாலூத்திற்கும், ஹளரத் தாவூத் அலைஹிஸ்ஸலாம் அவர்களுக்கும் கடும் போர் மூண்டது. இறுதியில் ஹளரத் தாவூத் அலைஹிஸ்ஸலாம் அவர்கள் தன்னிடம் இருந்த மூன்று கற்களையும் எடுத்து பிஸ்மில்லாஹ் என்று கூறி அவனை நோக்கி எறிந்தார்கள். அம் மூன்று கற்களும் சேர்ந்து ஒரு கல்லாக மாறி அவன் நெற்றியை துழைத்துக் கொண்டு அவன் பிடறி வழியாக வெளியேறி அவனுக்குப் பின்னாலிருந்த முப்பது வீரர்களையும் பதம் பார்த்தது.ஜாலூத் கோரமாகப் கொல்லப்பட்டான். இவனின் கொலை அவன் படையை கதிகலங்க வைத்தது, உடனே அவர்கள் பின் வாங்கி தலை தெறிக்க ஓட்டம் பிடித்தனர். ஜாலூத்தின் உடலை ஹளரத் தாவூத் அலைஹிஸ்ஸலாம் அவர்கள் இழுத்து வந்து தாலூத் மன்னனின் காலடியில் போட்டார்கள். இச் செயலால் தாலூத் மன்னனும், இஸ்ரவேலர்களும் மட்டில்லா மகிழ்ச்சியடைந்தார்கள்.யுத்தத்தின் பின்னர் தாலூத்திற்கு வெற்றி கிட்டியது, தாலூத் அரசர் வாக்களித்தபடி தனது மகளை ஹளரத் தாவூத் அலைஹிஸ்ஸலாம் அவர்களுக்கு மணமுடித்துக் கொடுத்தார், பாதி ஆட்சியையும் வழங்கினார். இந் நிலையில் அவர்களுக்கு நபியாக இருந்த உஷ;மூவில் அலைஹிஸ்ஸலாம் அவர்கள் வபாத்தானார்கள்.இஸ்ரவேலர்களுக்கு பெரும் சவாலாக இருந்த அமாலிக்கா சமுகத்தையும், உலகையே கலக்கிக் கொண்டிருந்த ஜாலூத் மன்னனையும் கொன்றதற்காக இஸ்ரவேலர்கள் ஹளரத் தாவூத் அலைஹிஸ்ஸலாம் அவர்கள் மீது அளவில்லாத அன்பு கொண்டிருந்தார்கள்.இது மன்னர் தாலூத்திற்குப் பிடிக்கவில்லை. அதனால் ஹளரத் தாவூத் அலைஹிஸ்ஸலாம் அவர்கள் மீது அவருக்கு காழ்ப்பு ஏற்பட்டது. இச் சந்தர்ப்பத்தில்தான்..இஸ்ரவேலர்களுக்கு நபியாக இருந்த உஷ;முவுல் அலைஹிஸ்ஸலாம் அவர்கள் வபாத்தானார்கள். இவரின் வபாத்தை தாலூத் மன்னன் சாதகமாக்கி ஹளரத் தாவூத் அலைஹிஸ்ஸலாம் அவர்களை கொல்வதற்கு சதி செய்யலானார். தாலூத் தன்னைக் கொல்ல சதி செய்கிறார்; என்பதை தெரிந்து கொண்ட ஹளரத் தாவூத் அலைஹிஸ்ஸலாம் அவர்கள் தனது ஆட்சியைத் துறந்து விட்டு மலைகளில் தவம் செய்த யோகிகளுடன் சேர்ந்து கொண்டாரகள்;.மக்களின் செல்வாக்கைப் பயன்படுத்தி தனது ஆட்சிக்கு எதிராக தாவூத் அலைஹிஸ்ஸலாம் அவர்கள் கிளர்ச்சி செய்வார் என்று தப்புக் கணக்கு போட்ட தாலூத் அரசருக்கு தாவூத் நபியவர்களின் முடிவு பெரிய ஏமாற்றத்தைக் கொடுத்தது. பின்னர் தன் தவறை உணர்ந்து ஹளரத் தாவூத் அலைஹிஸ்ஸலாம் அவர்களிடம் மன்னிப்புக் கேட்டு சமாதானமானார். தன் தவறுக்காக தௌபாச் செய்தார்.தாலூத் மன்னர் நாற்பது ஆண்டுகள் ஆட்சி செய்தார். இவரின் மறைவிற்குப் பின் தேசத்தின் முழு ஆட்சியும் ஹளரத் தாவூத் அலைஹிஸ்ஸலாம் அவர்கள் வசமாகியது. ஹளரத் உஷ;மூவில் அலைஹிஸ்ஸலாம் அவர்கள் வபாத்தானதால், இஸ்ரவேலர்களின் நபித்துவ வெற்றிடத்திற்கு ஹளரத் தாவூத் அலைஹிஸ்ஸலாம் அவர்களை அல்லாஹ் நபியாக நியமித்தான்.வரலாற்றில் நபித்துவமும், ஆட்சியும் சேர்த்து வழங்கப்பட்ட முதலாவது நபி ஹளரத் தாவூத் அலைஹிஸ்ஸலாம் அவர்களாகும். எழுபது ஆண்டுகள் நுபுவ்வத்தையும், ஆட்சியையும் சிறப்பாக பூரணப்படுத்தினார்கள். இவர்களுக்குப் பின் இவர்களின் அருமைப் புதல்வர்; ஹளரத் சுலைமான் அலைஹிஸ்ஸலாம் அவர்கள் நபியாகவும், அரசராகவும் தேர்வு செய்யப்பட்டார்கள்;. முழு உலகையும் ஆண்டார்கள்.மேற்கண்ட வரலாற்றின் சுருக்கம் திருக்குர்ஆனில் கூறப்பட்டுள்ளது.தாவூத் ஜாலூத்தைக் கொன்றார், அல்லாஹ் அவருக்கு ஆட்சியையும், நுபுவ்வத்தையும் கொடுத்து அவன் நாடியதிலிருந்து அவருக்கு கற்பித்தான். அல்குர்ஆன் (02:251)ஹளரத் தாவூத் அலைஹிஸ்ஸலாம் அவர்கள் மாபெரும் அரசராக இருந்த போதிலும், அவர்கள் கையால் உழைத்தே உண்பார்கள்.ஹளரத் தாவூத் அலைஹிஸ்ஸலாம் அவர்களின் காலத்தில் வாழ்ந்த மக்கள் கல்லை களிமன் போன்று இழக வைக்கும் தொழிநுட்பத்தை அறிந்திருந்தனர்.இதனால் கல்லைக் குடைந்து குகை சமைத்து அதில் வாழ்ந்தனர்.மர்யமின் மிஹ்ஹாப்ஹளரத் ஈஸா அலைஹிஸ்ஸலாம் அவர்களின் தாயாகிய அன்னை மர்யம் அவர்களின் தந்தையின் பெயர் ஷஇம்றான்| ஆகும். தாயின் பெயர் ஷஹன்னா|. இவர் நீண்டகாலமாக பிள்ளை பாக்கியம் இல்லாதிருந்தார்கள். ஒரு தினம் ஒரு மரத்தின் நிழலில் இருக்கையில் ஒரு தாய்ப் பறவை தனது குஞ்சுகளுக்கு உணவளிப்பதைக் கண்டு, தனக்கும் இப்படி ஒரு குழந்தை இருப்பின் அதற்கு அமுதூட்டும் பாக்கியம் பெறுவேனே! என்ற ஏக்கம் அவர்களின் மனதை வருடியது அப்போது.அல்லாஹ்வின் பக்கம் மனமுருகி ஷஷயாஅல்லாஹ்|| எனக்கு ஒரு மகவை நீ தந்தால் அதனை பைத்துல் முகத்தஸுக்கு ஊழியம் செய்வதற்கு அர்ப்பணிப்பேன் என்று நேர்ச்சை செய்தார்கள். கொஞ்ச நாள் கடந்தும் மர்யமின் தாயார் கருவுற்றார்கள். மர்யம் கற்பமாக இருக்கும் போதே தந்தை இம்றான் வபாத்தாகி விட்டார்.அன்னை மர்யமின் தாயார் ஷஹன்னா| அவர்கள் தன் வயிற்றிலிருப்பது ஆணாக இருக்கும் என்று நம்பினார்கள். அதனால்தான் அக்குழந்தையை பைத்துல் முகத்தஸுக்கு நேர்ச்சை செய்தார்கள். தான் எதிர்பார்த்ததற்கு மாறாக பெண் குழந்தையைப் பிரசவித்ததும், ஷயாஅல்லாஹ்! பெண்ணை பிரசவித்துள்ளேன். ஒரு பெண் ஆண் போன்று ஆகமாட்டார். அதற்கு ஷமர்யம்| என்று நாமம் சூட்டியுள்ளேன். அவரையும் அவர் பிச்சளங்களையும் iஷத்தானின் தீங்கிலிருந்து பாதுகாவல் தேடுகிறேன்|| என்று பிரார்த்தித்தார்.ஷஷஹன்னா|| அவர்;கள் தான் நேர்ச்சை செய்தவாறு குழந்தையை துணியில் சுற்றி பைத்துல் முகத்தஸிலிலுள்ள பாதிமார்களிடம் ஒப்படைத்;தார்கள். ஹளரத் மர்யமின் தந்தை ஷஇம்றான்| என்பவர் ஏற்கனவே பைத்துல் முகத்திஸின் தலைமைப் பாதிரியாக இருந்துள்ளார். அதனால் அவரின் குழந்தையை பாரம் எடுப்பதில் பைத்துல் முகத்தஸிலுள்ள பாதிரிமார்களுக்கு மத்தியில் போட்டி நிலவியது.இச்சந்தர்ப்பத்தில் நபி ஸகரிய்யா அலைஹிஸ்ஸலாம், மர்யம் அவர்களின் தாயின் சகோதரியான ஷஈஹாஃ| என்பவரைத் திருமணம் முடித்துள்ளார்கள். அதனால் உறவாலும், தலைமை பாதிரி என்ற வகையாலும் ஹளரத் மர்யம் அவர்களை வளர்ப்பதற்கு உரிமை கோரினார்கள். ஆயினும் இதற்கு சிலர் உடன்படவில்லை.திருவுளச் சீட்டின் மூலமே வளர்ப்பவரைத் தெரிவு செய்யலாம் என்று முடிவு செய்யப்பட்டது. போட்டிக்கு 27 பேர்கள் முன் வந்தனர். இவர்கள் யாவரும் வஹி எழுதுகின்றவர்களாகும். இவர்களின் எழுதுகோல்களை நீரில் போடுவது என்று நீரில் மிதக்கும் எழுதுகோல் உடையவரே மர்யமை வளர்ப்பதற்கு உரித்துடையவர் என்றும் தீர்மானிக்கப்பட்டது. இதன்படி எழுதுகோல்கள் நீரில் போடப்பட்டன. ஏனையோரின் எழுதுகோல்கள் நீரில் அமிழ்ந்துவிட்டன. ஹளரத் ஸகரிய்யா நபி அலைஹிஸ்ஸலாம் அவர்களின் எழுதுகோல் மட்டும் நீரில் மிதந்தது. குழந்தையை வளர்க்கும் பொறுப்பு இதன்படி நபி ஸகரிய்யா அலைஹிஸ்ஸலாம் அவர்களிடம் ஒப்படைக்கப்பட்டது.பைத்துல் முகத்தஸில் தனியான ஓர் இடம் ஏற்பாடு செய்யப்பட்டது. அதற்கு ஏழு வாசல்கள் இருந்தன. இதில் குறிப்பிட்ட ஒரு மிஃறாபில் ஹளரத் மர்யம் அவர்களை வைத்திருந்தனர். ஹளரத் மர்யம் அவர்கள் தனித்திருந்து அல்லாஹ்வைத் துதிப்பார்கள், வணங்குவார்கள். தினமும் அவர்களின் அன்றாடத் தேவைகளை நிறைவேற்றுவதற்காக ஹளரத் ஸகரிய்யா நபி அலைஹிஸ்ஸலாம் அவர்கள் அங்கு வந்து செல்வார்கள்.ஹளரத் மர்யம் அவர்கள் தாய்பால் அருந்தவில்லை. வேறு செவிலித் தாய்களிடமிருந்தும் பால் அருந்தவுமில்லை. இந்நிலையில் நபி ஸகரிய்யா அலைஹிஸ்ஸலாம் மர்யம் அவர்கள் இருந்த இடத்திற்குச் சென்று பார்க்கும் போது அங்கு ஓர் அதிசியத்தைப் பார்த்தார்கள். பருவ காலத்தில் கிடைக்காத கனிகள் அங்கு இருக்கக் கண்டார்கள். மாரி காலத்தில் கோடை காலத்துக் கனிகளும், கோடை காலத்தில் மாரிகாலத்துக் கனிகளும் இருக்கக் கண்டார்கள்.ஷஹளரத் மர்யம்| பேசும் பருவமில்லாத சிறு குழந்தையாக இருந்தார்கள். இருப்பினும் நபி ஸகரிய்யா அலைஹிஸ்ஸலாம் மர்யமைப் பார்த்து, இக்கனிவர்க்கங்கள் உங்களுக்கு எங்கிருந்து கிடைத்தன என்று கேட்டார்கள்? பேசுவதற்கு திராணியிலில்லாத பச்சிளம் குழந்தையாகிய மர்யம் அவர்கள் வாய் திறந்து இது எனது றப்பிடமிருந்து கிடைக்கின்றன. அவன் நாடியவர்களுக்கு எண்ணிக்கையில்லாமல் வழங்குவான்| என்று திருத்தமாக மொழிந்தார்கள்.நபி சகரிய்யா அலைஹிஸ்ஸலாம் ஆச்சரியப்பட்டார்கள். பூட்டப்பட்ட அறையில் அக்காலத்தில் கிடைக்காத கனிவர்க்கங்கள் இருக்கின்றன. பேச முடியாத, பேசுவதை புரியும் பருவமில்லாத பிஞ்சுக் குழந்தை பேசுகின்றது. அமுதுண்ணும் பருவத்தில் கனி வர்க்கங்களை சுவைக்கின்றது. எல்லாமே அதிசயம் ஒரு நல்லடியார் வழியாக நடக்கும் அற்புதத்தை ஷகறாமத்| என்பர். ஹளரத் மர்யம் அவர்கள் பிறப்பாலே வலியாகத் திகழ்வதையும் அவர்கள் வழியாக ஷகறாமத்| நிகழ்வதையும் அவனித்த நபி ஸகரிய்யா அலைஹிஸ்ஸலாம் சிந்தித்தார்கள்.நபி ஸகரிய்யா அலைஹிஸ்ஸலாம் அவர்களுக்கு நீண்ட நாட்களாக குழந்தை பாக்கியமில்லை. இது அவர்கள் மனதில் நீங்காத கவலையாகவே இருந்து வந்தது. குழந்தை வேண்டி பல்லாண்டுகாலம் அல்லாஹ்விடம் இறைஞ்சக் கேட்டுக் கேட்டுக் கொண்டே வந்தார்கள். வயதும் தாண்டி முதுமைப் பருவத்தையும் அடைந்துள்ளார்கள். ஆயினும் குழந்தை இல்லாத குறை அவர்களின் மனதிலிருந்து மறையவே இல்லை.ஒரு நாள் ஒரு எண்ணம் அவர்களின் மனதில்பட்டது. ஹளரத் மர்யமின் இருப்பிடத்தில் அற்புதங்கள் பல நிகழ்ந்த வண்ணமிருந்தன. பருவ காலத்தில் கிடைக்காத கனி வர்க்கங்கள் கிடைக்கின்றன. ஆதலால் குழந்தை கிடைக்கும் பருவத்தைத் தாண்டி நிற்கும் நமக்கும் இவ்விடத்தில் துஆக் கேட்பதனால் குழந்தை கிடைக்கக் கூடும் என்று கருதி அல்லாஹ்விடம் அங்கிருந்து கொண்டு துஆக் கேட்டார்கள். அல்லாஹுத்தஆலா அவர்களின் துஆவை ஏற்றுக்கொண்டான்.இச்சந்தர்ப்பத்தில் ஹளரத் ஸகரிய்யா நபி அலைஹிஸ்ஸலாம் அவர்களுக்கு தொண்ணூற்றி ஒன்பது என்றும் நூற்றி இரண்டு என்றும், நூற்றி இருபது என்றும் பல கருத்துக்கள் இருக்கின்றன. இதுபோன்று அவர்களின் மனைவிக்கு தொண்ணூற்றி எட்டு என்றும் கூறப்படுகின்றது. இந்த வயதில் இவர்கள் இருக்கையில்தான். ஷஷஉங்களுக்கு ஓர் ஆண் குழுந்தை கிடைக்கும் என்றும், அதன் பெயர் ஷஷயெஹ்யா|| என்றும் அல்லாஹுத்தஆலா அறிவித்தான்.இதனை அல்குர்ஆன் பின்வருமாறு கூறுகின்றது.ஷஷஜகரிய்யா அவளிருந்த மாடத்திற்குள் நுழையும் போதெல்லாம் அவளிடத்தில் (ஏதேனும்) உணவுப் பொருள் இருப்பதைக்கண்டு, ஷஷமர்யமே! இது உமக்கு எங்கிருந்து வந்தது?|| என்று கேட்டார். அதற்கவள், ஷஷஇது அல்லாஹ்விடமிருந்துதான் (வருகின்றது, ஏனென்றால்) நிச்சயமாக அல்லாஹ், தான் விரும்பியவர்களுக்கு அளவின்றியே உணவளிக்கின்றான் என்று கூறினாள்.(அப்பொழுது) ஸகரிய்யா அவ்விடத்தில் (தனக்காகத்) தன் இறைவனிடம் பிரார்த்து ஷஷஎன் இறைவனே! உன்பாலிலிருந்து எனக்கொரு பரிசுத்தமான சந்ததியை அளிப்பாயாக! நிச்சயமாக நீ, பிரார்த்தனைகளைச் செவியுறுவோனாக இருக்கின்றாய்|| என்று கூறினார்.ஆகவே, மாடத்தில் (மிஹ்றாப்) நின்று அவர் தொழுது கொண்டிருந்த சமயத்தில், (அவரை நோக்கி) மலக்குகள் சப்தமிட்டுக் கூறினார்கள். (ஸகரிய்யாவே!) நிச்சயமாக அல்லாஹ், யஹ்யா (என்ற ஒரு மக)வை உமக்கு அளிப்பதாக நன்மாராயம் கூறுகின்றான். அவர் (தகப்பனின்றி) அல்லாஹ்வின் ஒரு சொல்லை (க் கொண்டு உண்டாகக் கூடிய ஈஸா நபியை - முன்னறிக்கையாக) உண்மைப்படுத்தி வைப்பார். (மனிதர்களுக்குத்) தலைவராகவும் (பெண் இன்பத்தைத்) ந்தவராகவும், நபியாகவும் துற நல்லொழுக்கம் உடையோராகவும் இருப்பார்!||(அதற்கு ஸகரிய்யாவாகிய) அவர், (அல்லாஹ்வை நோக்கி) ஷஷஎன் இறைவனே! எனக்கு எவ்வாறு சந்ததி உண்டாகும்? நிச்சயமாக நானோ முதுமையை அடைந்து விட்டேன்னே! என் மனைவியோ மலடியாக இருக்கின்றாள்|| என்று கூறினார். (அதற்கு இறைவன்) ஷஷஇவ்வாறே (நடைபெறும்) அல்லாஹ்தான் விரும்பியதை (அவசியம்) செய்(தே தீரு)வான்|| என்று கூறினாள்.(அதற்கு) அவர் ஷஷஎன் இறைவனே! (இதற்கு) எனக்கோர் அத்தாட்சி அளி|| என்று கேட்டார். (அதற்கு) அவள் ஷஉமக்கு (அளிக்கப்படும்) அத்தாட்சியாவது மூன்று நாட்கள் வரையில் சைகை மூலமன்றி, நீர் மனிதர்களுடன் பேசமாட்டீர். (அந்நாட்களில்) நீர் உம் இறைவனை (அவன் நாமத்தை) அதிகமாகத் துதித்துக்கொண்டும் காலையிலும், மாலையிலும் (அவனைத்) துதி செய்து கொண்டும் இருப்பீராக!|| என்று கூறினான். அல்குர்ஆன் 3-38-41மேற்கண்ட நிகழ்விலிருந்து பின்வரும் படிப்பினைகளை முஸ்லிம்கள் அவசியம் பெற்றுக்கொள்ளல் வேண்டும்.01.ஹளரத் மர்யம் அவர்கள் குழந்தைப் பருவத்திலிருந்தே விலாயத்தையும், கறாமத்தையும் பெற்றிருந்தனர். பருவகாலத்தில் கிடைக்காத கனி வகைகள் அவர்கள் தங்கியிருந்த இடத்தில் அல்லாஹ்வின் தரப்பிலிருந்து கிடைத்ததும், பேசாத பருவத்தில் தெளிவாகப் பேசியதும் இதற்கு தக்க சான்றாகும்.02.அல்லாஹ்வின் நல்லடியார்கள் அவர்கள் ஆண்களாகவுமிருக்கலாம், பெண்களாகவுமிருக்கலாம். அவர்கள் தங்கியிருந்து இபாதத்; செய்யும் இடத்தில் அல்லாஹ்வின் அருள்மாரி பொழிகின்றது. இப்படியான இடங்களில் துஆ கபூலாகின்றது. ஹளரத் ஸகரிய்யா நபி அலைஹிஸ்ஸலாம் அவர்கள் குழந்தை வரம் கேட்டு அல்லாஹ்விடம் செய்த பிரார்த்தனை அங்கு கபூலானது. ஸகரிய்யா நபி அலைஹிஸ்ஸலாம் அவர்கள் இதற்கு முன் பைத்துல் முகத்தஸில் பலமுறை துஆக் கேட்டும் கிடைக்காத குழந்தைப் பாக்கியம் ஹளரத் மர்யம் அவர்கள் இருந்த இடத்தில் கேட்டதும் கபூலானது இதற்கு நல்ல ஆதாரமாகும்.சட்டமேதை இமாம் ஷhபிஈ றஹ்மத்துல்லாஹி அலைஹி அவர்களுக்கு அவசியத் தேவைகள் ஏதும் ஏற்பட்டால் இமாமுல் அஃழம் இமாம் அபூஹனீபா ரஹ்மத்துல்லாஹி அவர்களின் புனித கப்றுக்குப் பக்கத்திலிருந்து துஆக் கேட்பார்கள். துஆக் கபூலாகும். இதுபோன்று எடுத்துக் காட்டுக்கள் ஏராளம் உண்டு. ஒரு சட்டமேதை மற்றுமொரு சட்ட மேதையை வஸீலாவாக்கி, அவர்கள் கபுறடியில் கேட்டதை விட பெரிய ஆதாரம் வேறு தேவையா

No comments:
Post a Comment