ஷரீஅத் சட்டத்தில் இஜ்மாஃவின் நிலை.
இஜ்மாஃவை மறுக்கலாமா?
ஷரீஅத் சட்டம் நான்கு அடிப்படைகளைக் கொண்டது. குர்ஆன், ஹதீஸ், இஜ்மாஃ, கியாஸ்! இவை நான்கின் துணை கொண்டுதான் கண்ணியத்திற்குரிய இமாம்கள் ஷரீஅத்தின் சட்டங்களை வகுத்து தந்துள்ளார்கள்.இந்நான்கு மூலாதாரக் கொள்கைகளில் “இஜ்மாஃ“வைக் குறித்து சற்று ஆராய்வோம்.இஜ்மாஃ என்றால் இத்திஃபாக் ஒன்றுபடுதல் என்று பொருள். அதாவது ஒரே காலத்தில் வாழக்கூடிய ஸாலிஹீன்களான சட்டத்துறை வல்லுனர்கள் சொல், அல்லது செயல் சம்பந்தப்பட்ட பிரச்சினைகளில் ஒன்றுபடுதல் என்று அர்த்தம்.மார்க்கச் சட்டத்துறையில் “இஜ்மாஃ“ தனி அந்தஸ்த்தும், தகுதியும் பெற்றதாக அமைந்துள்ளதால் இஜ்மாஃ மூலம் முடிவு செய்யப்பட்ட ஒரு சட்டத்தை மறுப்பவன் காபிராகிவிடுகிறான். இதனால்தான்,“இஜ்மாஃ ஆதாரமாக ஆகாது என்று இஜ்மாஃவின் அசலை ஒருவன் மறுத்தால் அவனை காபிர் என்றே தீர்ப்புக் கூற வேண்டும்“ என இமாம் அப்துல் அஸீஸ் புகாரி ரஹ்மத்துல்லாஹி அலைஹி அவர்கள் கஷ்புல் அஸ்ரார் (பாகம் - 04, பக்கம் - 261) என்ற நூலில் கூறுகின்றார்கள். இதே கருத்தினை இமாமுல் ஹுமாம் ரஹ்மத்துல்லாஹி அலைஹி அவர்களும் தெரிவித்துள்ளனர்.“பொதுவாக இஜ்மாஃவின் ஆதாரங்களை மறுப்பவன் காபிராகிவிடுகின்றான். இதுதான் எங்களது ஷெய்குமார்களின் மத்ஹபுமாகும்.நூல் : அல்புஸூலுல் பதாயிஃ பீ உஸூலிஷ் ஷராயிஃ, பாகம் - 02, பக்கம் - 274“இஜ்மாஃவில் பர தரங்கள் உள்ளன. அதில் முதற்தரத்தில் உள்ளவை திருமறையில் உள்ள ஒரு திருவசனத்தைப் போன்றும், முதவாத்திரான நபிமொழியைப் போன்றுமுள்ளது. எனவே, இஜ்மாஃவை மறுப்பவன் காபிராகிவிடுகின்றான்“.நூல் : தல்வீஹ், பாகம் - 02, பக்கம் - 575குர்ஆனிலும், ஹதீஸிலும் ஊர்ஜிதமான ஒன்றை மறுப்பவன் எப்படி காபிராகிவிடுகின்றானோ அதேபோன்று இஜ்மாவை மறுப்பவனும் காபிராகிவிடுகின்றான்.இமாம் நஸபி ரஹ்மத்துல்லாஹி அலைஹி அவர்களதுகஷ்புல் அஸ்ரார் ஷரஹல் மனார், பாகம் - 02, பக்கம் - 111இவ்வாறு இஸ்லாமிய ஷரீஅத் சட்டத்தின் மூலாதாரங்களில் ஒன்றாக விளங்குகின்ற இஜ்மாஃவை மறுப்பவன் - காபிராகிவிடுகின்றான் எனக்கூறும் இமாம்களின் பட்டியல் நீண்டு செல்கிறது. அந்த அளவுக்கு இஜ்மாஃ ஷரீஅத்தின் மூலாதார அடிப்படைகளில் ஒன்றாக விளங்குகின்றது. ஏனென்றால்,அண்ணலெம் பெருமானார் ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம் அவர்களை இணையில்லாக் கோமானாக - இறுதித் தூதுவராக இறைவன் அகிலத்திற்கு அருள்பாலித்தான்! அவர்கள் மூலமாக வழங்கிய இஸ்லாமிய ஷரீஅத்தை இவ்வுலகு உள்ளவும் அவன் நிலைபெறச் செய்வான்!அத்தகு அண்ணலர் ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம் அவர்கள் சொன்னார்கள், “எனது சமூகத்தில் ஒரு சாரார் சத்தியத்தின் மீது இறுதி நாள் வரை வெற்றி பெறக் கூடியவர்களாக இருப்பர்“.நபி பெருமான் ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம் மண்ணுலக வாழ்வை முடித்துக் கொண்டதோடு “வஹீ“ நின்று விட்டது. இந்நிலையில் தனது சமூகத்தில் ஒரு சாரார் இறுதி நாள்வரை சத்தியத்தின் மீது வெற்றி பெறக் கூடியவராக இருப்பர் என்றும்,“வழிகேட்டில் எனது சமூகம் ஒன்று சேராது“ என்றும் கூறுவதாயின், இமாம்களின் ஏகோபித்த கருத்துக்களில் தவறு நிகழும் என்று கூறுவது சரியாகாது! தவறு ஏற்படும் என்ற வாதத்தை ஏற்றுக் கொள்வோமானால் அண்ணலாரின் அருளுரைகள் பொய்த்து விடக்கூடும்.எனவேதான், இஜ்மாஃ சந்தேகங்களுக்கிடமின்றி ஷரீஅத்தின் நான்கு ஆதாரங்களில் ஒன்றாக அமைந்திருக்கின்றது. ஷரீஅத்தின் உறுதியான மூலாதாரமாகவும் திகழ்கிறது.“இஜ்மாஃ என்பது மார்க்கத்தில் கண்டிப்பாக அறியப்பட்ட உறுதியான ஆதாரமாகும்“.மவாகிப் - காழி ஙழ்துத்தீன் ஷரஹுல் மவாஹிப் - அல்லாமா ஸெய்யது ஷரீப், பாகம் - 01,பக்கம் - 159இஜ்மாஃ என்பது உறுதியான ஆதாரம். முஸ்லிம்கள் அனைவரிடத்திலும் திட்டவட்டமான ஞானத்தை அறிவை கொடுக்கக் கூடியது. இமாம்களின் கருத்து ஒற்றுமைக்கு பின்னர் தோன்றிய (அறிவு ஜீவிகள் என்று தம்மை கூறிக்கொள்கின்ற) காரிஜிய்யாக்கள், ராபிழீகள் போன்ற(கூறுகெட்ட)வர்களின் கருத்துக்கள் கவனிக்கத்தக்கதல்ல! இவர்கள் மார்க்கத்தின் முக்கியமான விஷயங்களில் சந்தேகங்களைத் தூண்டிவிட்டுக் கொண்டிருக்கின்றனர்“.
முஸல்லமுஸ் ஸுபூத் வ பவா திஹுர் ரஹ்மூத், பாகம் - 02, பக்கம் - 494எனவே, குர்ஆனும் ஹதீஸ்களும் போதும் என்று கூறுவோர் மார்க்கச் சட்டங்களின் முழுமையை அறியாத அரைகுறைகளாவர்! அவர்களின் கவர்ச்சி வாதங்களில் மனதைப் பறிகொடுத்து ஈமானை இழந்துவிடாமல் அஹ்லுஸ் ஸுன்னத் வல்ஜமாஅத்தினர் விழிப்போடிருக்க வேண்டியது இன்றைய காலத்தின் கட்டாயம்!வல்லான் அல்லாஹ் வழி தவறிய கூட்டத்தினரின் வலையில் சிக்கிவிடாது நம்மைக் காத்தருள்வானாக!
முஸல்லமுஸ் ஸுபூத் வ பவா திஹுர் ரஹ்மூத், பாகம் - 02, பக்கம் - 494எனவே, குர்ஆனும் ஹதீஸ்களும் போதும் என்று கூறுவோர் மார்க்கச் சட்டங்களின் முழுமையை அறியாத அரைகுறைகளாவர்! அவர்களின் கவர்ச்சி வாதங்களில் மனதைப் பறிகொடுத்து ஈமானை இழந்துவிடாமல் அஹ்லுஸ் ஸுன்னத் வல்ஜமாஅத்தினர் விழிப்போடிருக்க வேண்டியது இன்றைய காலத்தின் கட்டாயம்!வல்லான் அல்லாஹ் வழி தவறிய கூட்டத்தினரின் வலையில் சிக்கிவிடாது நம்மைக் காத்தருள்வானாக!
No comments:
Post a Comment