பிஸ்மில்லாஹிர்ரஹ்மானிர்ரஹீம்
திருவாடானை வட்டார ஜமாஅத்துல் உலமா சபை
செயற்குழு தீர்மான விபரம்
அல்லாஹ்வின் பேரருளால் நமது சபையின் செயற்குழு கூட்டம் கடந்த
07.12.2013 சனிக்கிழமை காலை 10.00 மணியளவில் சபைத்தலைவர்
மௌலானா S .M .M .அஹமது இப்ராஹிம் பாஜில்தேவ்பந்தி ஹழ்ரத்
அவர்களின் தலைமையில் தொண்டி புதுப்பள்ளி வாசலில் சிறப்பாக
நடைபெற்றது.
அதில் ஏக மனதாக நிறை வேற்றப்பட்ட தீர்மானங்கள்
1, உலமாக்கள் ---- உமராக்கள் கூட்டம் இன்ஷா அல்லாஹ் எதிர்வரும் ஜனவரி மாதம் திருப்பாலைக்குடியில் நடத்துவது எனவும் அதற்கான தேதி பின்னர் அறிவிப்பது எனவும் தீர்மானிக்கப்பட்டது .
2, எதிர்வரும் ரபீயுல் அவ்வல் மாதத்தில் நமது வட்டாரத்தில் உள்ள ஒவ்வொரு மஹல்லாவிலும் நபி (ஸல் ) அவர்களின் உதய தினத்தை முன்னிட்டு சிறப்பு சொற்பொழிவுகள் மூலம் அவர்களின் வாழ்க்கை வரலாறுகளை மக்களுக்கு எடுத்து சொல்வது எனவும், இமாம்கள் ஜும் ஆ உரைகளில் நபியின் வாழ்க்கை வரலாறுகளை தொடர் பயான் செய்வது எனவும் தீர்மானிக்கப்பட்டது.
3, நமது வட்டார சபையின் பெயரில் புதிதாக வலை தளம் (WEBSITE ) துவங்குவது என தீர்மானிக்கப்பட்டது.
இது சம்பந்தமாக கீழ்க்காணும் குழுவினர் நியமிக்கப்பட்டுள்ளனர்.
1, மௌலானா S.M.M. அஹமது இப்ராஹிம் ஹழ்ரத்
2, மௌலானா S.அப்துல் ஹக்கீம் ஹழ்ரத்
3, மௌலானா A.பதுருத்தீன் ஹழ்ரத் 4, மௌலானா K.A .அப்துல் கையும் ஹழ்ரத்
5, மௌலானா H.முஹம்மது ஜலாலுத்தீன் ஹழ்ரத்
6, மௌலானா S.முஹம்மது காசிம் ஹழ்ரத்
7, மௌலானா M.முஹம்மது மீரான் ஹழ்ரத்
8, மௌலானா M.அப்துல் ஸமது ஹழ்ரத்
4, செயற்குழு கூட்டம் சிறப்பாக நடைபெற அனைத்து ஏற்பாடுகளையும் நிறைவாக செய்து கொடுத்த தொண்டி புதுப்பள்ளி வாசல் நிர்வாக சபை மற்றும் மஜ்மஉல் உலமா சகோதர உலமாக்கள் அனைவருக்கும் சபை தனது மனமார்ந்த நன்றியை தெரிவித்து கொள்கிறது.
ஒப்பம் என்றும் அன்புடன்
மௌலானா
S.M.M அஹமது இப்ராஹிம் ஹழ்ரத் மௌலானா S.அப்துல் பாஜில்தேவ்பந்தி ஹக்கீம் ஹழ்ரத்
தலைவர் தி.வ.ஜ.உலமா சபை செயலாளர் தி.வ.ஜ.உலமா சபை
செல் : 9442758451 செல் : 9443611080
திருவாடானை வட்டார ஜமா அத்துல் உலமா சபை
அலுவலகம்
அல் அஜ்ஹரிய்யா
அரபிக்கல்லூரி
தொண்டி -- 623409
பிஸ்மில்லாஹிர்ரஹ்மானிர்ரஹீம்
திருவாடானை வட்டார ஜமாஅத்துல் உலமா சபை
உலமாக்கள் - உமராக்கள் ஒருங்கிணைப்பு கூட்ட
தீர்மான விபரம்
அல்லாஹ்வின் பேரருளால் திருவாடானை வட்டார ஜமா அத்துல் உலமா
சபை சார்பாக உலமாக்கள் -உமராக்கள் ஒருங்கிணைப்பு கூட்டம் சபை தலைவர் மௌலானா S .M .M .அஹ்மது இப்ராஹிம் ஃ பாஜில் தேவ்பந்தி ஹழ்ரத் அவர்கள் தலைமையில் கடந்த 21.1.2014 செவ்வாய் காலை 11.00 மணியளவில் திருப்பாலைக்குடி பெரிய பள்ளிவாசலில் சிறப்பாக நடைபெற்றது .
அதில் ஏக மனதாக நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் .
1.இக்கூட்டதில் கலந்து கொண்ட நமது வட்டாரத்தை சேர்ந்த நிர்வாகிகள் வருகை மிக குறைவாக இருப்பதை கவலையோடு பரிசீலனை செய்து இனி வரும் காலங்களில் நிர்வாகிகள் முழுமையாக கலந்து கொள்வதற்காக உலமாக்களின் குழு நேரடியாக நிர்வாகிகளை சந்தித்து அழைப்பு கொடுப்பதென தீர்மானிக்கப்பட்டது .
2.மகதப் மதரசா செயல்பாடுகள் குறித்து அனைத்து ஜமா அத் நிர்வாகிகள் மற்றும் இமாம்களிடம் விளக்கம் கேட்கப் பட்டது .மேலும் மகதப் விஷயத்தில் பெற்றோர்கள் ,ஆசிரியர்கள் ,நிர்வாகிகள் இன்னும் கூடுதல் கவனம் செலுத்தவேண்டும் என தீர்மானிக்கப்பட்டது.
3.காலை- மாலை மகதப் மதரசா நடத்த சாதகமான சூழ்நிலை இல்லாத மஹல்லாக்களில் மஃரிப் தொழுகைக்கு பின்போ அல்லது இஷா தொழுகைக்கு பின்போ அவ்வூர் வசதிப்படி மதரசா நடத்த ஏற்பாடுகள் செய்ய வேண்டும் என தீர்மானிக்கப்பட்டது .
4.பொருளாதாரத்தில் மிக நலிந்த நிலையில் இருக்கும் குடும்பங்களை அந்தந்த ஊர் இமாம்கள் கண்டறிந்து நிர்வாகிகள் கவனத்திற்கு கொண்டு சென்று அவர்களின் மூலம் U .N .W .O பொறுப்புதாரிகளை சந்தித்து அந்தந்த குடும்பத்தினர் நல் வாழ்விற்கு முயற்சி செய்வதென தீர்மானிக்கப்பட்டது.
5.இஸ்லாமிய பெண்களின் கல்வி ,ஒழுக்க விஷயத்தில் உலமாக்களும் ,நிர்வாகிகளும் கூடுதல் கவனம் செலுத்த வேண்டும் எனவும்,மாதம் ஒரு முறை பெண்கள் பயான் நிகழ்ச்சி கட்டாயம் ஏற்பாடு செய்து நடத்த வேண்டும் எனவும் ,உள்ளூர் ஆலிமாக்களை பயன்படுத்தி பெண்களுக்கு மார்க்ககல்வி கிடைக்க அனைத்து நிர்வாகமும் ஏற்பாடு செய்ய வேண்டும் என தீர்மானிக்கப்பட்டது.
6.உலமாக்கள் -உமராக்கள் கூட்டம் சிறப்பாக நடை பெற அனைத்து உதவிகளையும் நிறைவாக செய்து கொடுத்து கௌரவப்படுத்திய திருப்பாலைக்குடி ஐக்கிய ஜமாஅத் நிர்வாகிகள்,பெரிய பள்ளிவாசல் நிர்வாகிகள் மற்றும் உள்ளூர் சகோதர உலமாப்பெருமக்கள் அனைவருக்கும் சபை தனது மனமார்ந்த நன்றியை தெரிவித்துக்கொள்கிறது.
ஒப்பம் என்றும் அன்புடன்
மௌலானா
S.M.M அஹமது இப்ராஹிம் ஹழ்ரத் மௌலானா S.அப்துல் பாஜில்தேவ்பந்தி ஹக்கீம் ஹழ்ரத்
தலைவர் தி.வ.ஜ.உலமா சபை செயலாளர் தி.வ.ஜ.உலமா சபை
செல் : 9442758451 செல் : 9443611080
பிஸ்மில்லாஹிர்ரஹ்மானிர்ரஹீம்
அல்லாஹ்வின் பேரருளால் நமது சபையின் செயற்குழு கூட்டம் கடந்த
11.08.2014 திங்கள் காலை 10.30 மணியளவில் சபை கௌரவ தலைவர்
மௌலானா M.அப்துர்ரஹ்மான் மிஸ்பாஹி ஹழ்ரத் அவர்களின்
தலைமையில் தொண்டி பெரிய பள்ளி வாசலில் சிறப்பாக
நடைபெற்றது.
அதில் ஏக மனதாக நிறை வேற்றப்பட்ட தீர்மானங்கள்
1. இன்ஷா அல்லாஹ் எதிர்வரும் ஷவ்வால் பிறை 29,26.8.2014 செவ்வாய் அன்று ஹாஜிகள் வழியனுப்பு விழா R .S .மங்களத்தில் நடத்துவதென தீர்மானிக்க பட்டது .
2,இந்த ஆண்டு நமது சபை சார்பாக சுதந்திர தின விழா பொதுக்கூட்டம் தோண்டி நாச்சியா மஹாலில் நடத்துவதெனவும் அதில் சிறப்பு சொற்பொழிவாளராக ஆலிம் ஒருவரையும் முக்கிய பிரமுகர் ஒருவரையும் அழைப்பதென தீர்மானிக்க பட்டது
இவ்விழா சம்பந்தமாக அனைத்து ஏற்பாடுகளை செய்ய கீழ்க்கண்ட ஐவர் குழு நியமிக்க பட்டுள்ளனர்
மௌலவி s .அப்துல் ஹக்கீம் பாக்கவி
மௌலவி s .முஹம்மது காசிம் யூசுபி
மௌலவி m .முஹம்மது மீரான் ரியாஜி
மௌலவி m .அக்பர் பாதுஷா காசிமி
மௌலவி u .செய்யது அலி பாதுஷா சிராஜி
3, ஒயிட் ஹவுஸ் நிறுவனத்தின் படிவங்கள் அனைத்து ஆலிம்கள் ,பிலால்களுக்கு வழங்கப்பட்டு இன்ஷா அல்லாஹ் எதிர்வரும் 18.8.2014 தேதிக்குள் படிவங்களை சான்றுகளுடன் பூர்த்தி செய்து சபையிடம் வழங்க வேண்டுமென அறிவுறுத்தப்பட்டது.
4,இன்ஷா அல்லாஹ் எதிர்வரும் 19.08.2014 அன்று சேலத்தில் நடைபெறும் மாநில சபை தேர்தலில் ஓட்டளிக்க சபை சார்பாக கீழ்கண்ட ஆறு ஆலிம்களுக்கு ஒப்புதல் அளிக்கப்பட்டது.
மௌலவி S.M.M அஹ்மது இப்ராஹிம் தேவ்பந்தி
மௌலவி A.பத்ருதீன் உலவி
மௌலவி s.அப்துல் ஹக்கீம் பாக்கவி
மௌலவி s .k .m .ஹைதர் அலி உலவி
மௌலவி s .முஹம்மது காசிம் யூசுபி
மௌலவி m முஹம்மது மீரான் ரியாஜி
5, செயற்குழு கூட்டம் சிறப்பாக நடைபெற அணைத்து ஏற்பாடுகளையும் நிறைவாக செய்து கொடுத்த தொண்டி நகர உலமா சகோதரர்களுக்கு சபை தனது மனமார்ந்த நன்றியும் து வையும்
தெரிவித்து கொள்கிறது
ஒப்பம் என்றும் அன்புடன்
மௌலானா
S.M.M அஹமது இப்ராஹிம் ஹழ்ரத் மௌலானா S.அப்துல் பாஜில்தேவ்பந்தி ஹக்கீம் ஹழ்ரத்
தலைவர் தி.வ.ஜ.உலமா சபை செயலாளர் தி.வ.ஜ.உலமா சபை
செல் : 9442758451 செல் : 9443611080
அஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ்)
திருவாடானை வட்டார ஜமா அத்துல் உலமா சபையின்
செயற்குழு தீர்மான விபரம்
அன்புடயீர்!
அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்....
அல்லாஹ்வின் பேரருளால்திருவாடானை வட்டார
ஜமா அத்துல் உலமா சபையின் செயற்குழு கூட்டம் கடந்த 17-2-2015 செவ்வாய் அன்று காலை
10.30. மணிக்கு
சபை தலைவர் மௌலானா மௌலவி S.M.M.அஹ்மது இப்ராஹிம்
ஃபாஜில் தேவ்பந்தி ஹழ்ரத் அவர்களின் தலைமையில் நம்புதாளை கிழக்கு பள்ளிவாசலில் சிறப்பாக
நடைபெற்றது.
அதில் ஏக மனதாக நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள்.
1, இன்ஷா அல்லாஹ் ஜமாதுல் அவ்வல் பிறை
11, 3-3-2015 செவ்வாய் காலை 10.00 மணி முதல் 12.00 மணி வரை இமாம்கள் - பிலால்கள் கலந்தாய்வு
கூட்டம்
M.R.பட்டினத்தில் அல் அஜ்ஹரிய்யா அரபிக்கல்லூரியில் சிறப்பாக நடைபெற்றது.
2, உலமாக்கள் - உமராக்கள் ஒருங்கிணைப்பு கூட்டம்
இன்ஷா அல்லாஹ் எதிர்வரும் ஷஃபான் 7, 26-5-2015 அன்று M.R.பட்டினத்தில்
நடத்துவதென தீர்மானிக்கப்பட்டது.
3, நமது சபையின் பொதுக்குழு கூட்டம் இன்ஷா
அல்லாஹ் எதிர்வரும் ஷஃபான் பிறை 19, 9-6-2015 அன்று தொண்டி பெரிய பள்ளிவாசலில்
நடத்துவதென தீர்மானிக்கப்பட்டது.
4, நமது வட்டார இமாம்கள், உஸ்தாத்கள், பிலால்கள்,
அனைவரிடமும் கையொப்பம், பெற்றுக்கொண்டு ஒயிட் ஹௌஸ் டோக்கன் வழங்கப்பட்டது.
5, சமுதாயம் சார்ந்த முக்கியமான ஷரிஅத் விவகாரங்களில் சுன்னத்வல் ஜமாஅத் கொள்கைகளை
வலைதளம் மூலம் வெளியிட அதற்கான குழுவினரிடம் அனுமதியும், ஆலோசனையும் பெற்று வெளியிட
மௌலவி M.அப்துஸ் ஸமது அல்தாஃபி அவர்களுக்கு அனுமதி வழங்கப்பட்டது.
6. செயற்குழு சிறப்பான நடைபெற அனைத்து உதவிகளையும் நிறைவாக செய்து கொடுத்து
கண்ணியப்படுத்திய நம்புதாளை ஸபீலுல் உலமா சபையின்
கண்ணியமிக்க உலமா பெருமக்களுக்கும், நம்புதாளை
கிழக்குதெரு ஜமாஅத் நிர்வாகத்திற்கும் சபை தனது மனமார்ந்த நன்றியையும், துஆவையும்
தெரிவித்துக்கொள்கிற்து.
ஒப்பம்
என்றும் அன்புடன்
மௌலானா மௌலானா S.அப்துல்
S.M.M அஹமது ஹக்கீம் ஹழ்ரத் இப்ராஹிம்ஹழ்ரத் பாஜில்தேவ்பந்தி
தலைவர் தி.வ.ஜ.உலமா சபை செயலாளர் தி.வ.ஜ.உலமா சபை
செல் : 9442758451 செல் : 9443611080
மௌலானா மௌலானா S.அப்துல்
S.M.M அஹமது ஹக்கீம் ஹழ்ரத் இப்ராஹிம்ஹழ்ரத் பாஜில்தேவ்பந்தி
தலைவர் தி.வ.ஜ.உலமா சபை செயலாளர் தி.வ.ஜ.உலமா சபை
செல் : 9442758451 செல் : 9443611080
No comments:
Post a Comment