துல்ஹஜ் மாதத்தின் பத்து நாட்களின் சிறப்புகள்
அருள் அன்புடைய அல்லாஹ்வின் திருப்பெயரால்
புகழ் அனைத்தும்; அல்லாஹ்வுக்கே.
ஸலாத்தும் ஸலாமும் எமது இறுதித் தூதர் நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் மீதும், அவர்களுடைய குடும்பத்தினர்கள், தோழர்கள்அனைவர் மீதும் உண்டாவதாக!
இஸ்லாமிய சகோதர, சகோதரிகளே! நல்லமல்கள் செய்து அதிகமான நன்மைகளை அடைந்து கொள்வதற்காக அல்லாஹ் பெறுமதி வாய்ந்த சில காலங்களை நமக்கு தந்திருக்கின்றான். அக்காலங்களில் நாம் அதிக நல்லமல்களைச் செய்து அதிக நன்மைகளைத் தேடிக் கொள்கின்றோம்.
துல்ஹஜ் மாத்ததின் முதல் பத்து நாட்களும் பெறுமதியான காலங்களில் உள்ளவையாகும். எனவே துல்ஹஜ் பத்து நாட்களின் சிறப்புகளை பின்வருமாறு அறிந்து கொள்வோம்.
துல்ஹஜ் பத்து நாட்களின் சிறப்புகள்
1. துல்ஹஜ் பத்து நாட்களைக் கொண்டு அல்லாஹ் சத்தியம் செய்துள்ளான். அல்லாஹ் ஏதாவதொன்றைக் கொண்டு சத்தியம் செய்தால் அவ்விஷயம் மிகவும் சிறந்தது. உயர்வானது என்பதைத்தான் அது அறிவிக்கின்றது. மகத்துவமிக்க அல்லாஹ் மகத்துவமான ஒன்றை கொண்டே தவிர சத்தியம் செய்ய மாட்டான். அல்லாஹ் தனது திருமறையில் கூறுகின்றான் : விடியற்காலையின் மீது சத்தியமாக. பத்து இரவுகளின் மீதும் சத்தியமாக . . . அல்குர்ஆன் அல்பஜ்ர் 1,2
இவ்வசனத்தில் கூறப்பட்ட பத்து இரவுகள் என்பது துல்ஹஜ் மாதத்தின் பத்து நாட்களாகும். இக்கருத்தைத் தான் எல்லா குர்ஆன் விரிவுரை உலமாக்களும் ஏகோபித்துக் கூறியுள்ளனர். இக்கருத்துத் தான் சரியானது என இமாம் இப்னு கஸீர்(ரஹ்) அவர்களும் கூறியுள்ளார்கள்.
2. அடியார்கள் தன்னை நினைவு கூறுவதற்காக அல்லாஹ் ஏற்படுத்திய குறிப்பிட்ட சில நாட்களும் இந்த பத்து நாட்களில் உள்ளது. அல்லாஹ் தனது திருமறையில் கூறுகின்றான்: தங்களுக்குரிய (இம்மை மறுமையின்) பலன்களை அவர்கள் அடைவதற்காகவும், அல்லாஹ்வின் பெயரை அவன் அவர்களுக்கு கொடுத்த (குர்பானிப் பிராணிகளான ஆடு, மாடு, ஒட்டகம் முதலிய) நாற்கால் பிராணிகள் மீது குறிப்பிட்ட நாட்களில் அவன் பெயரை சொல்லி குர்பான் கொடுப்பவர்களாகவும் வருவார்கள்.
அல்குர்ஆன் அல்ஹஜ்:28
அல்குர்ஆன் அல்ஹஜ்:28
இவ்வசனத்தில் குறிப்பிட்ட நாட்களில் என்பது துல்ஹஜ் மாதத்தின் பத்து நாட்களாகும் என உலமாக்கள் அனைவரும் ஏகோபித்து கூறியுள்ளனர். இப்னு உமர்(ரலி), இப்னு அப்பாஸ்(ரலி) ஆகியோரும் இக்கருத்தைத் தான் கூறியுள்ளனர்.
3. துல்ஹஜ் பத்து நாட்களும் உலக நாட்களில் மிகவும் சிறந்த நாட்களாகும் என நபிகள் நாயகம்(ஸல்) அவர்கள் பின்வருமாறு சாட்சி கூறியுள்ளார்கள்: உலக நாட்களில் மிகவும் சிறந்தது துல்ஹஜ் பத்து நாட்களாகும். அல்லாஹ்வின் பாதையில் போர் புரிவதை விடவும் இது சிறந்ததா? என நாயகம் (ஸல்) அவர்களிடம் கேட்கப்பட்ட போது, ஆம் அல்லாஹ்வின் பாதையில் போர் புரிவதை விடவும் இது சிறந்தது. ஆனால் ஒருவன் அல்லாஹ்வுக்காக அவனுடைய பாதையில் தனது உயிர், பொருள் ஆகியவற்றைக் கொண்டு சென்று போர் புரிந்து, மீண்டும் திரும்பி வராமல்,(காபிர்களால் ஷஹீதாக்கப்பட்டு) இருக்கின்றவனைத் தவிர எனக் கூறினார்கள்.
அறிவிப்பவர்: இப்னு அப்பாஸ்(ரலி).நூல்: புகாரி 969
அறிவிப்பவர்: இப்னு அப்பாஸ்(ரலி).நூல்: புகாரி 969
4. துல்ஹஜ் முதல் பத்தில் அரஃபா தினமும் உள்ளது. அரஃபா தினம் பாவங்களுக்கு மன்னிப்பும், நரக விடுதலையும் கிடைக்கும் தினமாகும். நபிகள் நாயகம்(ஸல்) அவர்கள் கூறினார்கள். அல்லாஹ் நரகத்திலிருந்து தனது அடியார்களை அதிகமாக விடுதலை செய்யும் தினம் அரஃபா தினமாகும். இதைத் தவிர வேறெந்த நாட்களிலும் அவ்வாறு விடுதலை செய்வதில்லை. அல்லாஹ் அத்தினத்தில் சிறிது இறங்கி வந்து, இவர்கள் என்ன விரும்புகின்றார்கள்? என மலக்குகளிடம் பெருமைப்பட்டுக் கொள்கின்றான்.
அறிவிப்பவர்: ஆயிஷா(ரலி), நூல்: முஸ்லிம் 2623
அறிவிப்பவர்: ஆயிஷா(ரலி), நூல்: முஸ்லிம் 2623
துல்ஹஜ் பத்து நாட்களின் சிறப்பிற்கு அரஃபா தினம் மாத்திரமே போதுமானதாகும்.
5. துல்ஹஜ் பத்து நாட்களிலும் அமல் செய்வது ஏனைய நாட்களில் அமல் செய்வதை விடவும் மிகவும் சிறந்தது. நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறினார்கள்: உலக நாட்களில் மிகவும் சிறந்த, அமல்கள் செய்வதில் அல்லாஹ்வுக்கு மிகவும் விருப்பமான நாட்கள் இந்த(துல்ஹஜ்) பத்து நாட்களாகும் எனவே இப்பத்து நாட்களில் லா இலாஹ இல்லல்லாஹ் என்றும் அல்லாஹ் அக்பர் என்றும் அல்ஹம்து லில்லாஹ் என்றும் அதிகமாகக் கூறுங்கள்.
அறிவிப்பவர்: அப்துல்லாஹ் இப்னு உமர்(ரலி), நூல்: தப்ரானி
அறிவிப்பவர்: அப்துல்லாஹ் இப்னு உமர்(ரலி), நூல்: தப்ரானி
துல்ஹஜ் பத்தில் செய்யும் அமல்கள்
1- அரஃபா தினத்தில் நோன்பு நோற்பது.
நபிகள் நாயகம்(ஸல்) அவர்கள் துல்ஹஜ் ஒன்பதாவது தினத்திலும், ஆஷீரா தினத்திலும், ஒவ்வொரு மாதமும் மூன்று தினங்களிலும் நோன்பு நோற்கக் கூடியவராக இருந்தார்கள்.
ஆதாரம்: அஹ்மத், அபுதாவுத், நஸஈ
மேலும் நபிகள் நாயகம் (ஸல்) கூறினார்கள்: அரஃபா தினத்தில் நோன்பு நோற்பதன் மூலம் முந்தைய ஒரு வருடத்தின் பாவங்களையும், பிந்திய ஒரு வருடத்தின் பாவங்களையும் அல்லாஹ் மன்னிப்பான் என எண்ணுகின்றேன். அறிவிப்பவர்: அபூ கதாத அல் அன்ஸாரி(ரலி). நூல்: முஸ்லிம்.

குறிப்பு: அரஃபா தினத்தில் நோன்பு நோற்பது ஹஜ்ஜுக்குச் செல்லாதவர்களுக்குரிய ஸுன்னத்தாகும். ஹஜ்ஜுக் கடமைகளில் ஈடுபட்டிருப்பவர்கள் இந்நோன்பை நோற்க முடியாது.
2 – இந்நாட்களில் அதிகமாக தக்பீர் சொல்வது, திக்ர் செய்வது.
அல்லாஹ் தனது திருமறையில் கூறுகிறான்: தங்களுக்குரிய (இம்மை மறுமையின்) பலன்களை அவர்கள் அடைவதற்காகவும், அல்லாஹ்வின் பெயரை அவன் அவர்களுக்குக் கொடுத்த (குர்பானிப் பிராணிகளான ஆடு, மாடு, ஒட்டகம் முதலிய) நாற்கால் பிராணிகள் மீது குறிப்பிட்ட நாட்களில் அவன் பெயரை சொல்லி குர்பான் கொடுப்பவர்களாகவும் வருவார்கள்.

மேலும், நபிகள் நாயகம்(ஸல்) அவர்கள் கூறினார்கள்: உலக நாட்களில் மிகவும் சிறந்த, அமல்கள் செய்வதில் அல்லாஹ்வுக்கு மிகவும் விருப்பமான நாட்கள் இந்த (துல்ஹஜ்) பத்து நாட்களாகும். எனவே இப்பத்து நாட்களில் லா இலாஹ இல்லல்லாஹ் என்றும் அல்லாஹ{ அக்பர் என்றும் அல்ஹம்து லில்லாஹ் என்றும் அதிகமாகக் கூறுங்கள்.
அறிவிப்பவர்: அப்துல்லாஹ் இப்னு உமர்(ரலி), நூல்: தப்ரானி
அறிவிப்பவர்: அப்துல்லாஹ் இப்னு உமர்(ரலி), நூல்: தப்ரானி
தக்பீர் சொல்லும் போது ஒன்று சேர்ந்து கூட்டமாக ஒரே குரலில் தக்பீர் சொல்வது ஸுன்னத்தல்ல, அது பித்அத்தாகும். தனித்தனியாக ஒவ்வொருவரும் தக்பீர் சொல்லிக்கொள்ள வேண்டும். ஹஜ்ஜுக்கு செல்லாதவர்கள் அரஃபா தினத்தின் ஃபஜ்ர் தொழுகையிலிருந்து அய்யாமுத் தஷ்ரீக்குடைய அஸர் தொழுகை வரைக்கும் தக்பீர் சொல்ல வேண்டும். இது ஸுன்னத்தாகும்.
3- துல்ஹஜ் பத்தாவது தினத்திலும் அய்யாமுத் தஷ்ரீக்குடைய தினங்களிலும் குர்பானி கொடுப்பது ஸுன்னத்தாகும். நபிகள் நாயகம்(ஸல்) அவர்கள் இத்தினத்தில் தனது கையாலேயே இரண்டு ஆடுகளை அறுத்து குர்பானி கொடுத்துள்ளார்கள்.
பிறை 13 மஃரிப் வரை குர்பானி கொடுக்கலாம்.
குர்பானி பற்றிய சில விளக்கங்கள்
குர்பானி கொடுப்பதை அல்லாஹ் நமக்கு அதிக நன்மையளிக்கும் ஓர் விஷயமாக ஆக்கியிருக்கின்றான். அல்லாஹ் தனது திருமறையில் கூறுகின்றான்: ஆகவே நீர் உமதிரட்சகனைத் தொழுது, இன்னும் (குர்பானியும் கொடுத்து அதை) அறுப்பீராக.
அல்குர்ஆன் அல்கவ்ஸர்: 2
குர்பானி கொடுப்பது கட்டாயமாக்கப்பட்ட ஸுன்னத்தாகும். குர்பானி கொடுக்க வசதியிருந்தும் அதை கொடுக்காமல் அலட்சியமாக இருக்க கூடாது. நபிகள் நாயகம்(ஸல்) அவர்கள் கருப்பு கலந்த மென்மையான, கொம்புள்ள இரண்டு ஆடுகளை அல்லாஹ்வுடைய பெயர் சொல்லி, தக்பீர் சொல்லி தங்களது கைகளாலே அறுத்து குர்பானி கொடுத்துள்ளார்கள்.
அறிவிப்பவர்: அனஸ்(ரலி). நூல்: புகாரி, முஸ்லிம்.
ஆகவே, அல்லாஹ்வால் சிறப்பாக்கப்பட்ட துல்ஹஜ் மாதத்தின் முதல் பத்து நாட்கள், நஹ்ருடைய நாளான பிறை 10 மற்றும் அய்யாமுத் தஷ்ரீக்குடைய நாளான பிறை 11, 12, 13 ஆகிய நாட்களில் அல்லாஹ்வை அதிகமதிகம் நினைவு கூர்ந்து திக்ர் செய்து அல்லாஹ்வுக்கு விருப்பமான நல்லமல்களை செய்து அல்லாஹ்வுடைய திருப்தியை பெறுவோமாக.

No comments:
Post a Comment