Pages

வெள்ளி கட்டுரை (ARTICLE OF JUMMA BAYAN)


இல்முல் ஜரஹ் வத் தஃதீல்: 

சில விதிமுறைகள்:


அறபு மூலம்: அபூ ஜிஹாத் ஸமீர் அல் ஜஸாஇரி
தமிழாக்கம்: மௌலவி எம் .ஐ. எம். நௌபர் (காஷிபி)

மொழியாக்க முன்னுரை:

வல்லோன் அல்லாஹ்வுக்கே எல்லாப் புகழும்… வள்ளல் நபி (ஸல்) அவர்கள் மீது அல்லாஹ்வின் சாந்தியும் கிருபையும் உண்டாவதாக…
உன்னதமான ஹதீஸ் கலையில் இல்முல் ஜரஹ் வத்தஃதீல் எனும் அறிவிப்பாளர்களின் குறை நிறைகளை எடைபோடும் துறை முக்கியமானதும் தனித்துவமிக்கதுமான   உப பிரிவாகும் என்பதில் ஐயமில்லை.
அந்த வகையில் அபூ ஜிஹாத் ஸமீர் அல் ஜஸாஇரி அவர்களது சுருக்க நூல் எளிமையானதாகவும் இக்கலையில் ஆரம்ப நிலையில் உள்ளவர்களுக்கு ஒரு வழிகாட்டியாகவும் இருக்கும் எனக் கருதிய நான் அல்லாஹ்வின் மிகப் பெரும் உதவியால் அதை தமிழாக்கம் செய்துள்ளேன். முத்தேழு விதிகளைக் கொண்ட அந்த நூலின் முதல் பகுதியை தற்போது வெளியிடுகிறேன்.
எனவே, இது தொடர்பில் தக்களது ஆக்கபூர்வமான கருத்துகளை பெருமனதோடு வரவேற்கும் நான் எனது எழுத்துப் பணிக்கு தொடர்ந்து ஆக்கமும் ஊக்கமும் வழங்கி வரும் சகோதர்களான நியாஸ், அர்ஷத், சத்தியக் குரல் மற்றும் எனது கையெழுத்திப் பிரதியை நேரில் பார்த்து “ keep it up brother”  என்று சொன்ன அன்பர் லபீஸ் ஆகியோருக்கு  இந்த இடத்தில் நன்றி கூறக் கடமைப்பட்டுள்ளேன்.

إرواء الغليل من ضوابط الجرح و التعديل
لأبي جهاد سمير الجزائري
بسم الله والصلاة والسلام على رسول الله هذا بحث لطيف اختصرته من كتاب “ضوابط الجرح والتعديل” لعبد العزيز العبد اللطيف (وهوغير صاحب ضوابط التكفير)
فأسأل الله العظيم رب العرش العظيم وأنا في الثلث الأخير من الليل أن يغفر لي ما تقدم وما تأخر من ذنبي وأن يجعل هذا العمل عملا متقبلا مبرورا تنشرح له الصدور وتحبه القلوب ولا تمل من قراءته العيون والعقول.
أموت ويبقى ما كتبته … فيا ليت من قرا دعاليا
عسى الإله أن يعفو عني … ويغفر لي سوء فعاليا
فإليك هذه الضوابط:

ஆசிரியர் முன்னுரை

அளவற்ற அருளாளனும் நிகரற்ற அன்புடையோனுமாகிய அல்லாஹ்வின் பெயரால் ஆரம்பிக்கிறேன்…
அல்லாஹ்வின் தூதர் மீது சாந்தியும் அருளும் உண்டாவதாக…
அப்துல் அஸீஸ் அல் அப்துல் லதீப் என்பவரது “இல்முல் ஜரஹ் வத் தஃதீல்: விதிமுறைகள் என்ற நூலில் இருந்து சுருக்கம் செய்யப்பட்ட சிறந்த ஒரு ஆய்வே இந்த நூலாகும். இந்த அப்துல் அஸீஸ் என்பவர் “இறைநிராகரிப்பாளர் என கருதுவதற்கான விதிமுறைகள்” என்ற நூலின் ஆசிரியர் அல்லர். இவர் வேறொருவர்.
எனது தவறுகளை மண்ணித்து இதனை நல்லமலாக அங்கீகரிக்க வேண்டும் என வல்ல இறைவனை பிரார்த்தித்துக் கொள்கிறேன்.
நான் மண்மறைந்தாலும்…
நான் எழுதியவைகள் நிலைத்திருந்து…
அதை வாசிப்பவர் எனக்காக பிரார்த்தனை செய்தால்…
அல்லாஹ் என்னை மண்ணித்து
எனது தவறுகளை நீக்கி விடலாம்…
இதோ அந்த விதிமுறைகள்.

1.الموصوف بما يقتضي تضعيف روايته لا يخلو تضعيفه من ثلاث حالات هي
விதி: 01
ஒரு அறிவிப்பாளர் கீழ் வரும் மூண்று காரனங்களில் ஒன்றால் பலவீனமானவராகக் கருதப்படுகிறார்.
الأولى: أن يكون تضعيفاً مطلقاً فهذا لا تقبل معه رواية الراوي عند تفرّده بها ولكن تتقوى بالمتابعة من مثله فترتقي إلى حسن لغيره.
அ‍. ஒரு அறிவிப்பாளர் எந்தவித வரையறையுமின்றி பொதுவாகவே பலவீனமானவர் என திறனாய்வாளர்களால் குறை கூறப்பட்டிருந்தால் அவர் மாத்திரம் தனித்து அறிவிக்கும் செய்திகள் ஏற்றுக் கொள்ளப்படமாட்டாது. எனினும் அவரது தரத்திலே உள்ள (பொதுவாக வரையறையின்றி பலவீனமானவர் எனக் கூறப்பட்ட) மற்றுமொரு அறிவிப்பாளர் இவருடன் சேர்ந்து அதே செய்தியை அறிவித்திருந்தால் அச்செய்தி ஆதாரம் அற்றது என்ற நிலையில் இருந்து கடைசி நிலை ஆதாரபூர்வமான செய்தி (ஹஸன் லிகைரிஹி) என்ற நிலையை அடைந்துவிடும்.
الثانية: أن يكون تضعيفاً مقيداً بالرواية عن بعض الشيوخ أو في بعض البلدان أو في بعض الأوقات فيختص الضعف بما قُيد به دون سواه.
ஆ. ஒரு அறிவிப்பாளர் குறித்த வரையறையுடன் பலவீனமானவர் என திறனாய்வாளர்களால் குறை கூறப்பட்டிருந்தால், அதாவது இந்த அறிவிப்பாளர் தனது இன்ன இன்ன ஆசான்களிடம் இருந்து அறிவிக்கும் செய்திகள் பலவீனமானவை என்றோ அல்லது இன்ன இன்ன நாடுகளில், பிரதேசங்களில் உள்ளவர்களிடம் கேட்டதாக அறிவிக்கும் செய்திகள் பலவீனமானவை என்றோ அல்லது இந்தக் காலத்திற்குப் பின், நிகழ்வுக்கு முன் அறிவிக்கும் செய்திகள் பலவீனமானவை என திறனாய்வாளர்களால் குறை கூறப்பட்டிருப்பார்.
இவ்வாறு வரையரை செய்யப்பட்ட பலவீனத்தைக் கொண்ட அறிவிப்பாளர் குறித்த வரையறை செய்யப்பட்ட விடயங்களில் மாத்திரம், நிலமைகளில் மாத்திரம் பலவீனமானவராகவும் ஏனைய விடயங்களில், நிலமைகளில் பலமானவராகவும் கருதப்படுவார்.
الثالثة: أن يكون تضعيفاً نسبياً وهو الواقع عند المفاضلة بين راويين فأكثر فهذا لا يلزم منه ثبوت الضعف المطلق في الراوي بل يختلف الحكم عليه بحسب قرينة الحال في تلك المفاضلة.
இ.ஒரு அறிவிப்பாளர் மற்றொரு அறிவிப்பாளருடன் அல்லது சில அறிவிப்பாளர்களுடன் ஒப்பிடப்பட்டு எடை போடப்பட்டிருப்பார். இவ்வாறு (ஏனையவர்களுடன்) ஒப்பிடும் போது பலவீனமானவர் என திறனாய்வாளர்களால் குறை கூறப்பட்ட ஒரு அறிவிப்பாளரை பொதுவாகவே பலவீனமானவர் என எடுத்துக் கொள்ளக் கூடாது.
மாறாக யாருடன் ஒப்பிடப்பட்டுள்ளார் என்பதைத் பொறுத்தே இவர் ஏற்றுக் கொள்ளத் தக்கவரா இல்லையா என்பதை முடிவு செய்ய வேண்டும்.
وأمّا الموصوف بما يقتضي ردَّ روايته فهو الضعيف جداً فمن دونه لا يُقَوِّي غيره ولا يَتَقَوَّى بغيره.
அது அல்லாமல் ஒரு அறிவிப்பாளரின் செய்தியை ஏற்றுக் கொள்ளவே முடியாது என்ற அளவிற்கு “மிகவும் பலவீனமானவர்” என திறனாய்வாளர்களால் குறை கூறப்பட்ட ஒரு அறிவிப்பாளர் அல்லது அதை விடவும் கடுமையாக “பொய்யர்” அல்லது “கைவிடப்பட்டவர்” என விமர்சிக்கப்பட்ட ஒரு அறிவிப்பாளர் இன்னொருவருடன் சேர்ந்து ஒரு செய்தியை அறிவித்தால் அச்செய்தியை இவர் (கடுமையான விமர்சனத்திற்கு ஆளானவர்) பலப்படுத்தவும் மாட்டார் இன்னொருவர் இவருடன் சேர்ந்து அறிவித்தால் இவர் பலமடையவும் மாட்டார்.

2.ما يخرج الراوي عن دائرة الضبط.
விதி: 02
ஒரு அறிவிப்பாளரை நம்பகமானவர் என்ற வட்டத்திலிருந்து நீக்கிவிடக்கூடிய காரணிகளாவன:
كثرة الوَهْم: أن تكثر من الراوي الرواية على سبيل التَّوهُّم فَيَصِلَ الإسناد المرسل، ويرفع الأثر الموقوف ونحو ذلك.
அ.அதிக யூகம்:
அதாவது ஒரு அறிவிப்பாளர் அதிகமாக யூகத்தின் அடிப்படையில் செய்திகளை அறிவிப்பது… தாபிஈன்களது அறிவிப்புகளை நபித்தோழர்களது அறிவிப்புகளாக கூட்டியோ அல்லது நபித்தோழர்களது சொல், செயல், அங்கீகாரங்களை நபி (ஸல்) அவர்களது சொல், செயல், அங்கீகாரமாக அறிவிப்பது போன்றதாகும்.
كثرة مخالفة الراوي لمن هو أوثق منه أو لجمع من الثقات.
ஆ. ஒரு அறிவிப்பாளர் தன்னை விட நம்பகத்தன்மையில் கூடிய ஒருவருக்கோ அல்லது நம்பகமான அறிவிப்பாளர்கள் பலருக்கோ அதிகம் முரணாக அறிவிப்பது.
سوء الحفظ: أن لا يترجح جانب إصابة الراوي على جانب خطئه بل يتساوى الاحتمالان.
இ.மோசமான மணன சக்தி:
அதாவது ஒரு அறிவிப்பாளர் தவறாக அறிவித்தவைகள் அவர் சரியாக அறிவித்தவைகளை விட அதிகம் இல்லாமல் தவறான அறிவிப்புகள் சரியான அறிவிப்புகள் இரண்டுக்குமான சாத்தியப்பாடு சம அளவில் காண‌ப்படுவது.
شدّة الغفلة: أن لا يكون لدى الراوي من اليقظة والإتقان ما يميّز به الصواب من الخطأ في مروياته.
ஈ. அதிக கவனயீனம்:
ஒரு அறிவிப்பாளர் தான் அறிவித்தவைகளில் சரியானவை எவை பிழையானவை எவை என பிரித்தறியும் அளவிற்கு திறனும் விழிப்பும் இல்லாமல் இருப்பது.
فحش الغلط: أن يزيد خطأ الراوي على صوابه زيادة فاحشة.
உ.மோசமான தவறுகள்:
ஒரு அறிவிப்பாளரின் சரியான அறிவிப்புகளை விட தவறான அறிவிப்புகள் மிக மோசமான அள‌விற்று அதிகமாக இருப்பது.
جهل الراوي بمدلولات الألفاظ ومقاصدها وما يُحيْلُ معانيها عند الرواية بالمعنى حيث يتعيّن عند ذلك الأداء باللفظ الذي سمعه اتفاقاً لئلا يقع فيما يَصْرِفُ الحديث عن المعنى المراد به.
ஊ. ஒரு அறிவிப்பாளர் தான் அறிவித்த செய்திகளின் வார்த்தைகளின் அர்த்தங்களையும் நோக்கங்களையும் அறியாமல் இருப்பதும் கருத்து ரீதியாக ஒரு செய்தியை அறிவிக்கும் போது அதன் கருத்தை மாற்றிவிடக்கூடிய வார்த்தைகளை அறியாமல் இருப்பதும்.
இவ்வேளைகளில் அவர் செய்திகளின் கருத்தை மாற்றிவிடும் பிரயோகங்களை பயன்படுத்தாமல் இருப்பதற்காக தான் எவ்வாறு அவைகளைக் கேட்டாரோ, செவி மடுத்தாரோ அவ்வாறே, அதே வார்த்தைப் பிரயோகங்களில் அறிவிக்க வேண்டும்.
تساهل الراوي في مقابلة كتابه وتصحيحه وصيانته.
எ. ஒரு அறிவிப்பாளர் தான் அறிவிக்கும் செய்திகளை தான் எழுதியவைகளுடன் ஒப்பிட்டுப் பார்த்துக் கொள்வதற்கும் தவறுகளை சரி செய்து கொள்வதற்கும் தான் எழுதியவைகளை அழிந்து விடாமல், அவைகளுடன் வேறு விடயங்கள் கலந்து விடாமல் பாதுகாப்பதில் கவனயீனமாக இருத்தல்.

 3.تثبت عدالة الراوي بأحد أمرين:
விதி: 03
ஒரு அறிவிப்பாளரின் நம்பகத்தன்மை பின் வரும் இரு விடயங்களில் ஒன்றின் மூலம் உறுதி செய்யப்படும்.
الأمر الأول: الاستفاضة: بأن يشتهر الراوي بالخير ويشيع الثناء عليه بالثقة والأمانة فيكفي ذلك عن بيّنة تشهد بعدالته.
அ. ஒரு அறிவிப்பாளர் நல்லவர் என்றும் அவர் நம்பகமானவர், நேர்மையானவர் என்றும் பிரபல்யம் அடைந்தவராக இருந்தால் அவர் நேர்மையானவர் எனபதை உறுதி செய்யும் ஆதாராம் தேவைபடாது. அப்பிரபல்யமே போதுமானதாகும்.
الأمر الثاني: تَنْصيصُ الأئمة المُعَدِّلين على عدالة الراوي.
ஆ. திறனாய்வாளர்கள் ஒரு அறிவிப்பாளரை நம்பகமானவர்தான் என உறுதி செய்தல்.

4.الإخراج للرواي في الصحيحين يُكْسِبُه توثيقاً ضمنياً في العدالة مطلقاً، وأما في الضبط فإنه يكتسبه أيضاً إن كان الإخراج له في الأصول مع مراعاة وجه الإخراج له، وإن كان الإخراج له في المتابعات والشواهد ونحوها فبحسب حاله.
விதி: 04
ஒரு அறிவிப்பாளர் புஹாரி, முஸ்லிம் ஆகிய நூல்களில் இடம் பெற்றவராக இருந்தால் அவர் நேர்மையானவர் (عادل)என்ற அந்தஸ்தை மறைமுகமாக பெற்றவராகிறார்.
எனினும் அவரது நம்பகத்தன்மையை பொறுத்தளவில் புஹாரி, முஸ்லிம் கிரந்தங்களின் மூலச் செய்தியை (اصول)அவர் அறிவிப்பவராக இருந்தால் அவரது அறிவிப்பு எப்படி இடம் பெறுகிறது எனபதைக் கவன‌த்திற் கொண்டு அவர் நம்பகமானவர் ( نقة) என்ற அந்தஸ்தையும் அடைந்து கொள்வார்.
ஆனால் அவரது அறிவிப்பு மூலச் செய்திகளை பலப்படுத்தும் வகையில் துணைச் சாண்றாக (شواهد) இடம் பெற்றிருந்தாலோ அல்லது மூலச் செய்திகளை அறிவிப்பதில் இவரும் பங்கு கொள்கிறார் என்பதை விளக்கும் வகையிலோ அவரது செய்தி இடம் பெற்றிருந்தால் அவரது நிலமையைக் கவனத்திற் கொண்டே அவரது நம்பகத்தன்மையை முடிவெடுக்க வேண்டும்.

5.شروط المعدّل والجارح:
يشترط في المعدل والجارح أربعة شروط هي:
விதி: 05
ஒரு திறனாய்வாளர் ஏனைய அறிவிப்பாளர்களின் குறை நிறைகளை எடைபோடும் விமர்சகராக இருப்பதற்கு நான்கு நிபந்தனைகள் அவசியமாகும்.
أن يكون عدلا.
அ. முதலில் அவர் நேர்மையானவராக இருக்க வேண்டும்.
أن يكون وَرِعاً يمنعه الورع من التعصب والهوى.
ஆ. பக்க சார்பாகவும் மனோ இச்சை அடிப்படையில் அறிவிப்பாளர்களை விமர்சிப்பதை விட்டும் தடுக்கக் கூடிய பேணுதல் உள்ளவராக இருக்க வேண்டும்.
أن يكون يَقِظاً غير مغفّل لئلا يغتر بظاهر حال الراوي.
இ. ஒரு அறிவிப்பாளரின் வெளிப்படையான நிலமையை வைத்து விமர்சிக்கும் அளவிற்கு கவனயீனம் உள்ளவராக இல்லாமல் விழிப்புணர்வு உள்ளவராக இருக்க வேண்டும்.
أن يكون عارفاً بأسباب الجرح والتعديل لئلا يجرح عدلاً أو يعدّل من استحق الجرح.
ஈ. ஒரு நம்பகமான அறிவிப்பாளரை குறை கூறாமல் இருக்க, குறையுள்ள அறிவிப்பாளர்களுக்கு நம்பகமானவர்கள் என சான்றிதழ் வழங்காமல் இருக்க அறிவிப்பாளர்களில் ஏற்படும் குறை நிறைகளுக்கான காரனங்களை அறிந்தவராக இருக்க வேண்டும்.

6.قبول الجرح والتعديل مفسّرين أو مبهمين:
விதி: 06
ஒரு அறிவிப்பாளர் பற்றிய குறை நிறைகள் காரனம் கூறப்பட்டோ காரனம் கூறப்படாமலோ இடம் பெறுவது:
إن كان مَنْ جُرِحَ مجملاً قد وثقه أحد من أئمة هذا الشأن لم يُقبل الجرح فيه من أحد كائناً من كان إلّا مفسراً؛ لأنه قد ثبتت له رتبة الثقة فلا يزحزح عنها إلّا بأمر جلي.
*இத்துறையில் தடம் பதித்த ஒரு திறனாய்வாளர் ஒருவர் ஒரு அறிவிப்பாளரை நம்பகமானவர் என உறுதி செய்திருக்க இன்னொருவர் காரனம் கூறாமல் அவரைக் குறை கூறினால் அந்தக் குறையை யார் கூறினாலும் ஏற்றுக் கொள்ளக் கூடாது.
ஏனெனில் ஏற்கனவே குறித்த அறிவிப்பாளர் நம்பகமானவர் என்ற வட்டத்துக்குள் வந்து விட்டார் என்பதால் காரனத்துடன் அவர் மீது தெளிவாகவே குறை கூறப்பட்டாலே அன்றி அவர் குறை உள்ளவர் என்ற நிலைக்கு வரமாட்டார்.
وإن كان مَنْ جُرِحَ جرحاً مبهماً قد خلا عن التعديل قُبِلَ فيه الجرح وإن كان مبهماً إذا صدر من إمام عارف
*இத்துறையில் பாண்டித்தியம் பெற்ற ஒரு திறனாய்வாளர் ஒரு அறிவிப்பாளரை காரனம் குறிப்பிடாமல் குறை கூறியிருக்க, அந்த அறிவிப்பாளரை வேறுயாரும் நம்பகமானவர் என கூறியிருக்கவில்லை என்றால் அக்குறை காரனம் குறிப்பிடப்படாமல் இருந்தாலும் அதை ஏற்றுக் கொள்ள வேண்டும்.
وذلك لأن الراوي إذا لم يُعدَّلْ فهو في حَيِّزِ المجهول، فإعمالُ قول المجرِّح فيه أولى من إهماله وإنما لم يُطْلبْ من المجرِّح تفسير جرحه لأنه لو فسره فكان جرحاً غير قادح لمنعت جهالة حال الراوي من الاحتجاج به.
ஏனெனில் ஒரு அறிவிப்பாளர் பற்றி யாரும் நம்பகமானவர் என உறுதிசெய்யாமல் இருந்தால் அந்த அறிவிப்பாளர் “நம்பகத்தன்மை அறியப்படாதவர்” என்ற வட்டத்திற்குள்தான் இருப்பார். எனவே இந்த நிலையில் திறனாய்வாளரின் காரனம் கூறப்படாத குறையை விட்டுவிடாமல் அதைக் கருத்திற் கொள்வதே ஏற்புடையதாகும்.
ஏனெனில் இந்த நிலையில் திறனாய்வாளர் குறைக்கான காரனத்தைக் கூறத்தான் வேண்டும் என்றிருந்து, அவர் அக்காரனத்தை விளக்கிக் கூறி,  அக்காரனம் அறிவிப்பாளரில் தாக்கம் செலுத்தாத, நியாயமான காரனமாக இல்லாமல் இருந்தாலும் கூட குறித்த அறிவிப்பாளரை யாரும் “நம்பகமானவர்” என உறுதி செய்யாத காரனத்தால் அவரது நிலை “நம்பகத்தன்மை அறியப்படாதவர்” என்றிருப்பதால் அவரது செய்தியை ஆதாரமாகக் கொள்ள முடியாத நிலையில்தான் இருக்கவும்.

7.يرد الجرح في كتب الجرح والتعديل مبهماً في الغالب ولا مناص من أخذ تلك الجروح المبهمة بالاعتبار لئلا يتعطّل النقد ولكن يتأكد طلب تفسير الجرح حيث توجد قرينة داعية إليه.
விதி: 07
அறிவிப்பாளார்களின் குறை நிறைகளை அலசும் நூல்களில் பெரும்பாலும் அறிவிப்பாளர்கள் பற்றி இடம் பெறும் குறைகள் காரனம் கூறப்படாமல்தான் காணப்படும்.
எனவே, இவ்வாறான காரனம் கூறப்படாத குறைகளை நாம் கருத்திற் கொள்ள வேண்டும். அவ்வாறில்லை என்றால் விமர்சனம் வீணாகி விடும். எனினும் அக்ககுறைகளுக்கான காரனங்களைக் கண்டறிய வேண்டிய தேவை ஏற்படும் போது அவைகளைக் கண்டறிந்து உறுதி செய்து கொள்வதே ஏற்புடையதாகும்.
8.تعارض الجرح والتعديل:
விதி: 08
ஒரு குறித்த அறிவிப்பாளர் பற்றி நிறைகளும் குறைகளும் முரண்படும் போது:
لتعارض الجرح والتعديل صورتان هما:
ஒரு அறிவிப்பாளர் பற்றிய குறைகளும் நிறைகளும் இரு நிலைகளில் முரண்பட்டுக் காணப்படும்:
أن يكون تعارضهما بصدورهما من إمامين فأكثر.
அ. ஒரு அறிவிப்பாளர் பற்றிய குறைகளும் நிறைகளும் இரண்டு அல்லது இரண்டுக்கு மேற்பட்ட திறனாய்வாளர்களிடம் இருந்து ஏற்பட்டதாக அமையும்.
أن يتعارضا وقد صدرا من إمام واحد والمراد بالجرح هنا الجرح المفسّر
ஆ. அல்லது குறித்த ஒரு அறிவிப்பாளர் பற்றி ஒரு திறனாய்வாளரே ஒரு இடத்தில் அவரை நம்பகமானவர் என்றும் மற்றொரு இடத்தில் “காரனத்துடன்” குறை கூறியிருத்தல்.

9.إذا تعارض الجرح المفسّر مع التعديل بصدورهما من إمامين فأكثر فمذهب الجمهور تقديم الجرح على التعديل مطلقاً،
விதி: 09
இரண்டு அல்லது அதற்கு மேற்பட்ட திறனாய்வாளர்கள் குறித்த ஒரு அறிவிப்பாளர் தொடர்பாக காரனத்துடன் குறை கூறியும், நிறை கூறியும் இருந்தால் எப்போதுமே காரனத்துடன் கூறப்பட்ட குறையை எடுப்பதே பெரும்பாலான திறனாய்வாளர்களது முறையாகும்.
سواء زاد عدد المُعدِّلين على عدد المُجرِّحين أو نقص عنه أو استويا
இவ்விடத்தில் குறை கூறியவர்களின் எண்ணிக்கையை விட நிறை கூறியவர்களின் எண்ணிக்கை அதிகம் இருந்தாலும் அல்லது குறைவாக இருந்தாலும் ஏன் இரு சாரார்களது எண்ணிக்கை சம அளவில் இருந்தாலும் சரியே.
وذلك لأن مع الجارح زيادةَ علمٍ بخفي حال الراوي لم يطَّلعْ عليها المعدِّلُ فالجارح مصدِّقٌ للمعدِّل في الحال الظاهرة ومبيّن لحال الراوي الخفية.
காரனம் குறை கூறியவர் நிறை கூறியவரை விடவும் அறிவிப்பாளரின் உன்மை நிலை பற்றி மேலதிக விபரங்களைப் பெற்றிருக்கிறார்.அத்துடன் அறிவிப்பாளரின் மேலோட்டமான நிலமை சரியானது என்ற விடயத்தில் குறை கூறியவரது கருத்துடன் உடன்படுகிறார். நிறை கூறியவர்களுக்குத் தெரியாத ஒரு நிலமையை இங்கே குறை கூறியவர் விளக்குகிறார்.

10.إذا تعارض الجرح المبهم مع التعديل فقد حكى السخاوي عن أبي الحجاج المزّي وغيره: ((أن التعديل مُقدّم على الجرح المبهم))
விதி: 10
ஒரு அறிவிப்பாளர் பற்றிய காரனம் கூறப்படாத குறையும் நிறையும் முரண்பட்டால் குறையை விட்டு விட்டு நிறையையே எடுக்க வேண்டும் என்பதே இமாம் அபுல் ஹஜ்ஜாஜ் அல் மிஸ்ஸி மற்றும் சிலரது கருத்து என இமாம் ஸஹாவி அவர்கள் எடுத்துக் கூறியுள்ளார்கள்.
لكن ليس ذلك على إطلاقه أيضاً فإن توثيق الإمام المتساهل لا يُقدّم على جرح الإمام المعتدل.
எனினும் இது அனைத்து சந்தர்ப்பங்களிலும் அமுல் படுத்தப்பட வேண்டிய விதி அல்ல.காரனம் அறிவிப்பாளர்களை எடை போடுவதில் , விமர்சனம் செய்வதில் மென்போக்கை கடைபிடித்த ஒரு திறனாய்வாளரின் நிறை நடுநிலையான போக்கை கடைபிடித்த திறனாய்வாளரின் காரனம் கூறப்படாத குறையை விட வலுவானது அல்ல.

11.إذا تعارض الجرح والتعديل الصادران من إمام واحد، فلذلك حالتان هما:
விதி: 11
குறித்த ஒரு அறிவிப்பாளர் பற்றிய குறையும் நிறையும் ஒரு திறனாய்வாளரிடம் இருந்தே இடம் பெற்றால்…இது இரு நிலைகளில் நோக்கப்படும்.
الحالة الأولى: أن يتبين تغيرُ اجتهاد الإمام في الحكم على ذلك الراوي، فالعمل حينئذ على المتأخر من قوليه.
அ.குறித்த ஒரு அறிவிப்பாளர் தொடர்பாக ஒரு திறனாய்வாளர் முதலில் ஒரு கருத்தைக் கூறி பின்னர் அதை மாற்றிக் கொண்டார் என்பது தெளிவானால், அவர் இறுதியாகக் கூறிய கருத்தையே அந்த அறிவிப்பாளர் தொடர்பில் எடுத்துக் கொள்ள வேண்டும்.
الحالة الثانية: أن لا يتبين تغيُّرُ اجتهاد الإمام في حكمه على الراوي، فالعمل على الترتيب التالي:
ஆ. அந்த திறனாய்வாளர் இறுதியாகக் கூறிய கருத்து எது என்பதை எந்த வகையிலும் புரிந்து கொள்ள முடியாவிட்டால் கீழ்வருமாறு அதை அணுக வேண்டும்:
1.يُطْلبُ الجمع بين القولين إن أمكن، كأن يكون التوثيق أو التضعيف نِسْبياً لا مطلقاً، فإن المعدِّل قد يقول: (فلان ثقة) ولا يريد به أنه ممن يُحْتجُّ بحديثه وإنما ذلك على حسب ما هو فيه ووجه السؤال له، فقد يُسألُ عن الرجل الفاضل المتوسط في حديثه فيُقْرَنُ بالضعفاء، فيقال: ما تقول في فلان وفلان وفلان؟. فيقول: (فلان ثقة) يريد أنه ليس من نمط من قُرنَ به وقد يُقْرنُ بأوثقَ منه فيقول: (فلان ضعيف) أي بالنسبة لمن قُرِنَ به في السؤال، فإذا سئل عنه بمفرده بيَّن حاله في التوسط. فقد سأل عثمان الدارمي يحيى بن معين عن العلاء بن عبد الرحمن عن أبيه. فقال: ((ليس به بأس. قال: قلت: هو أحب إليك أو سعيد المقْبُري؟ فقال: سعيد أوثق والعلاء ضعيف)) فتضعيف ابن معين للعلاء إنما هو بالنسبة لسعيد المقْبُري وليس تضعيفاً مطلقاً.
1. இரு கருத்துகளையும் இணைத்து விளங்க முடியுமாக இருந்தால் இவ்விரு கருத்துகளையும் இணத்து விளங்க வேண்டும்.
உதாரனமாக குறையையோ நிறையையோ பொதுவாக கூறாமல் ஏனைய அறிவிப்பாளர்களுடன் ஒப்பிட்டுக் கூறியிருத்தல்.
அதாவது அவரிடம் கேட்கப்பட்ட ஒரு கேள்வியின் போது அந்த அறிவிப்பாளர் “நம்பகமானவர்” எனக் கூறுவார்.அதன் அர்த்தம் அவரது செய்தியை ஆதாரமாகக் கொள்ள வேண்டும் என்பதல்ல.
ஒரு நடுத்தரமான அறிவிப்பாளர் மிகவும் பலவீனமான அறிவிப்பாளர்களுடன் சேர்த்து “இவர்கள் பற்றி என்ன கூறுகிறீர்கள்?” எனக் கேட்கப்பட்டால் “இவர் நம்பகமானவர்” எனக் கூறுவார்.
இதன் அர்த்தம் இவரோடு சேர்த்துக் கூறப்பட்டவர்கள் போன்று இவரும் (மிக) பலவீனமானவர் அல்ல என்பதே அன்றி இவர் நம்பகத் தன்மையில் நிறைவானவர் என்பதல்ல.
அதே போன்று மிகவும் நம்பகத்தன்மை வாய்ந்த அறிவிப்பாளர்களுடன் சாதாரன நம்பகத்தன்மை வாய்ந்த ஒருவர் இணைக்கப்பட்டு “இவர்கள் பற்றி என்ன கூறுகிறீர்கள்?” என ஒரு திறனாய்வாளரிடம் வினவப்படும் போது இவருடன் சேர்க்கப்பட்ட மிகவும் சிறந்த நம்பகத்தன்மை கொண்டவர்களை கவனத்திற்கு கொண்டு, ஒப்பிட்டு “இவர் பலவீனமானவர்” எனக் கூறுவார்.
எனினும் குறித்த அறிவிப்பாளர்  பற்றி தனியாக இதே திறனாய்வாளரிடம் கேட்கப்பட்டால் இவர்” நம்பகத்தன்மையில் நடுத்தரமானவர்” என்பதை விளக்குவார்.
உதாரனமாக உஸ்மான் அத்தாரிமி என்பவர் யஹ்யா பின் மஈன் அவர்களிடம்”அல் அலா பின் அப்திர் ரஹ்மான்” என்பவர் தனது தந்தையிடம் இருந்து செய்திகளை அறிவிப்பது தொடர்பாகக் கேட்கப்பட்ட போது “அவரில் குறையில்லை” என்றார். ‘அவர் உங்களுக்கு மிக விருப்பமானவரா அல்லது ஸஈத் அல் மக்புரி என்ற அறிவிப்பாளர் விருப்பமானவரா என கேட்கப்பட்ட போது ” ஸஈத் மிக நம்பகத்தன்மை கூடியவர்” அல் அலா” பலவீனமானவர் என்று பதிலளித்தார்கள்.
எனவே, திறனாய்வாளர் இப்னு மஈன் அவர்கள் இங்கே “அல் அலா பலவீனமானவர்” எனக் கூறியது (அவரைவிட நம்பகத்தன்மையில் கூடிய) ஸஈத் அல் மக்புரி அவர்களுடன் ஒப்பிட்டே அல்லாமல் அல் அலா பொதுவாகவே பலவீனமானவர் என்ற அர்த்ததில் அல்ல.
2.إذا لم يمكن الجمع، طُلِب الترجيح بين القولين بالقرائن، كأن يكون بعضُ تلاميذ الإِمام أكثر ملازمة له من بعض، فتقدَّم روايةُ الملازم على رواية غيره، كما هو الشأن في تقديم رواية عباس الدُّوري عن ابن معين لطول ملازمته له.
2. மேற்கண்டவாறு குறித்த ஒரு அறிவிப்பாளர் தொடர்பில் ஒரு திறனாய்வாளரது முரண்பட்ட குறையையும் நிறையையும் இணைத்து நோக்க முடியாத போது துணைச் சாண்றுகளைக் கொண்டு ஒரு கருத்தை விட்டு மறு கருத்தை எடுக்க வேண்டும்.
இத்தகைய துணைச் சான்றுகளில் ஒன்றாக, அறிவிப்பாளர் தொடர்பில் திறனாய்வாளரது இரு மாணவர்களில் ஒருவர் குறையையும் மற்றவர் நிறையையும் எடுத்துக் கூறுகிறார்கள் என்றால் இந்த சந்தர்ப்பத்தில் அவ்விரு  மாணவர்களில் யார் திறனாய்வாளருடன் அதிகம் சேர்ந்திருந்தவர் என்பதைக் கவனித்து அவரது கருத்தை எடுத்து மற்ற மாணவரின் கருத்தை விட்டு விடுவதைக் குறிப்பிடலாம்.
திறனாய்வாளர் இப்னு மஈன் அவர்களிடம் இருந்து  அவரது மானவன் அப்பாஸ் அத்தூரி கூறும் ஒரு அறிவிப்பாளர் தொடர்பான கருத்து  ஏனைய மாணவர்களுடை கருத்துகளுடன் முரண் பட்டால் ‍_இந்த வகையில்தான்_ அப்பாஸ் அத்தூரியின் கருத்துக்கு முன்னுரிமை வழங்கப்படுகிறது.
3.إذا لم توجد قرينة خاصة يرجّح بها فيؤخذ بأقرب القولين إلى أقوال أهل النقد وبالأخص أقوال الأئمة المعتدلين.
3. இவ்வாறு ஒரு அறிவிப்பாளர் தொடர்பான திறனாய்வாளரின் முரண்பட்ட இரு கருத்துகளில் ஒன்றை விட்டு மற்றொன்றை எடுப்பதற்கான பிரத்யோக துணைச் சாண்று எதுவும் காணப்படவில்லை என்றால் அவ்வறிவிப்பாளர் பற்றிய ஏனைய திறனாய்வாளர்களின் கருத்துக்கு மிக நெருக்கமான கருத்து எதுவோ அதை நாம் எடுத்துக் கொள்ள வேண்டும்.
அதிலும் குறிப்பாக அறிவிப்பாளர் பற்றி குறை நிறை கூறுவதில் மிதமான போக்கையோ தீவிரமான போக்கையோ கடைப்பிடிக்காமல் நடுநிலையான போக்கைக் கடைப்பிடித்த திறனாய்வாளர்களது கருத்துகளுக்கு நெருக்கமான கருத்தை எடுக்க வேண்டும்.
4.إذا لم يتيسّر ذلك كله فالتوقف حتى يظهر مرجّح.
4. ஒரு குறித்த அறிவிப்பாளர் தொடர்பான திறனாய்வாளரது முரண்பட்ட இரு கருத்துகளில் எதை எடுப்பது எதை விடுவது என்பதில் மேற்கண்ட அனைத்து வழிமுறைகளில் எதுவும் கைகூடவில்லை என்றால் தக்க சாண்று ஒன்று தென்படும் வரை அவரது இரு கூற்றுகளையும் நிறுத்தி வைக்க வேண்டும்.


  அஹ்லுஸ்ஸுன்னத் வல்ஜமாஅத்தின் அழகிய பாதை

இஸ்லாம் இறைவனால் அகில மக்களுக்கு அருளாக வழங்கப்பட்ட அற்புதமான வாழ்க்கைநெறி. நபி ஆதம் அலைஹிஸ்ஸலாம் அவர்கள் முதல் அண்ணல் பெருமானார் ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம் அவர்கள் வரை தோன்றிய இறைத்தூதர்கள் அனைவரும் போதித்த மார்க்கம் இஸ்லாம் ஒன்றே!
“இஸ்லாத்தைத் தவிர (வேறொரு) மார்க்கத்தை எவரேனும் விரும்பினால் நிச்சயமாக அவனிடமிருந்து (அது) அங்கீகரிக்கப்பட மாட்டாது“.
(அல்குர்ஆன் - 3 : 85)
இறைவனால் அங்கீகாரம் வழங்கப்பெற்ற இஸ்லாம் ஆரம்பக் கட்டத்தில் குழந்தைப் பருவத்தில் இருந்தது. எனவேஅப்போதைக்கு தேவைப்பட்ட சிறு சிறு சட்டங்களை இறைவன் நடைமுறைப்படுத்தினான்.
மக்கள் பல்கிப் பெருகினர். ஜனத்தொகைக்கு ஏற்ப பிரச்சினைகளும் வளர்ந்தன. அக்காலகட்டங்களில் ஏகதெய்வக் கொள்கையினை வலியுறுத்தி மக்களை நேர்வழி செலுத்த வழிகாட்டிகள் தேவைப்பட்டனர். எனவே அல்லாஹ் தனது தூதர்களை அவ்வப்போது அனுப்பினான். தோன்றிய நபிமார்கள் புதுப்புது தெய்வ நம்பிக்கைகளை மக்களுக்குப் போதிக்கவில்லை. மாறாக இறைவன் விதித்த கட்டளைகளை மட்டுமே அறிவுறுத்தினர்.
“அல்லாஹ்வின் மீது சத்தியமாக! உமக்கு முன்னிருந்த பல வகுப்பார்களுக்கும் நாம் (நம்முடைய) தூதர்களை அனுப்பி  வைத்தோம்“
(அல்குர்ஆன் - 16 : 63)
இவ்வாறு நபிமார்கள் மூலமாக இஸ்லாம் உலகில் கைமாறிக்கொண்டே வந்துஇறுதியாக மனித சமுதாயம் பல்கிப் பெருகி வழிகேடுகள் நிறைந்திருந்த ஒரு காலத்தில் அண்ணல் பெருமானார் ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம் அவர்கள் தோன்றினார்கள்.
“எனினும் அவர் அல்லாஹ்வுடைய தூதராகவும்நபிமார்களுக்கு முத்திரையாக (இறுதி நபியாக)வும் இருக்கிறார்“.
(அல்குர்ஆன் - 33 : 40)
இறுதி நபியாக தோன்றிய அண்ணல் பெருமானாரின் அருமைத் தோழர்கள் மற்ற நபிமார்களின் சீடர்களைப் போன்றில்லாமல் உண்மையான உள்ளத்தோடு அண்ணலாரின் கஷ்ட நஷ்டங்களிலும் தோள்கொடுக்க ஏன் இன்னுயிரையே கொடுக்கத் துணிந்து நி்ன்றனர்.
நபிமணித் தோழர்கள் நாயகம் ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம் அவர்களின் அடிச்சுவட்டை அப்படியே பின்பற்றி ஒழுகினர். அண்ணலாரின் ஆணைக்கு மாறாக இம்மியும் அவர்கள் நடக்கத் துணியவில்லை.
எனவேதான் உம்மத்தே முஹம்மதிய்யாவின் உன்னத வழிகாட்டிகளாக ஸஹாபாப் பெருமக்கள் திகழ்கின்றனர். “இறைவன் அவர்களைப் பொருந்திக் கொண்டான். அவர்கள் அவனைப் பொருந்திக் கொண்டனர்“ என இறைமறை போற்றுமளவுக்கு தம் வாழ்வியலை அமைத்துக்கொண்டு அனைத்துத் துறைகளுக்கும் முன்னோடியாக திகழ்ந்தனர் அவர்கள்.
அண்ணல் நபி ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம் அவர்கள் தம் தோழர்களைக் குறித்து “எனது தோழர்கள் நட்சத்திரங்களைப் போன்றவர்கள். அவர்களில் எவரைப் பின்பற்றினாலும் நேர்வழி பெறுவீர்கள்“ என்று புகழ்ந்துரைத்தனர்.
அறிவிப்பவர் : உமர் ரழியல்லாஹு அன்ஹு
நூல் : ரஸீன்மிஷ்காத்
இத்தகைய சிறப்பார்ந்த தோழர்களின் வழிமுறையையும் பின்பற்றுபவர்கள் தாம் அல்லுஸ் ஸுன்னத் வல் ஜமாஅத்தினர்.
குர்ஆனையும் ஹதீஸையும் மட்டும் எடுத்துக்கொண்டு ஸஹாபாக்களின் வழிமுறைகள் தேவையற்றவை என்று கூறினால் அவன் உண்மையான முஸ்லிமல்ல! ஏனென்றால் இஸ்லாத்தின் வழிகாட்டிகள் அவர்கள் ஒரு கட்சிக்கு வழிகாட்டும் தலைவர்களின் கொள்கைகளை - வழிமுறைகளை ஏற்காதவன் அக்கட்சியின் உண்மையான - விசுவாசமுள்ள தொண்டனாக முடியாதல்லவா?. எனவேநபித்தோழர்களின் வழிமுறைகளில் குறை காண்பவன் தன்னை முஸ்லிமென கூறிக்கொள்வதற்கே அருகதையுடையவன் அல்ல!
“இஸ்ரவேலர்கள் 72 கூட்டங்களாகப் பிரிந்தனர். எனது உம்மத் 73 கூட்டங்களாகப் பிரிவர். அவர்களில் ஒரு கூட்டத்தினரைத் தவிர அனைவரும் நரகவாசிகள்“. “யா ரஸுலல்லாஹ்! அந்த ஒரு கூட்டம் யாது?“ என ஸஹாபாக்கள் வினவ“நானும் எனது ஸஹாபாக்களும் எந்தக் கொள்கையில் இருக்கின்றோமோ அக்கொள்கையுடையோர்!“ என நபியவர்கள் விடை பகர்ந்தனர்.
அறிவிப்பவர் : இப்னு உமர் ரழியல்லாஹுஅன்ஹு
நூல் : திர்மிதி

இந்நபிமொழிக்கு விளக்கம் எழுதிய ஹளரத் முல்லா அலீகாரி ரஹ்மத்துல்லாஹி அலைஹி அவர்கள் தமது மிர்காத் என்ற நூலில் “சந்தேகத்திற்கிடமின்றி அவர்கள் அஹ்லுஸ் ஸுன்னத் வல்ஜமா அத்தினர் தாம்“ என்று பகர்கின்றார்கள்.
நபித்தோழர்களின் செயல்முறைகளுக்கும்அபிப்பிராயங்களுக்கும் இஸ்லாமிய ஷரீஅத் முக்கியத்துவம் அளிக்கின்றது. அவர்களின் கருத்தினை ஏற்றுக் கொண்டால்தான் ஷரீஅத்தின் சட்ட விளக்கங்களில் ஒரு தீர்மானமான முடிவுக்கு வர இயலும்.
ஸஹாபாக்கள் செய்த ஒரு செயல்அது நபி அவர்களுடைய காலத்தில் இல்லை என்றிருக்குமாயின் அதுவும் ஷரீஅத்தில் அங்கீகாரம் பெற்றதாகும். இதனை ரஸுல் ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம் அவர்களும் ஏற்றுக் கொண்டுள்ளனர் என்பதையே “எனது தோழர்களில் யாரைப் பி்ன்பற்றினாலும் நேர்வழி பெறுவீர்கள்“ என்ற நபிமொழி உறுதிப்படுத்துகிறது.
உதாரணமாக ஜும்ஆவுக்கு இரண்டு பாங்குகள் இன்று நடைமுறையில் உள்ளது. ஆனால்அண்ணல் நபி ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம் அவர்கள்அபூபக்கர் ரழியல்லாஹு அன்ஹுஉமர் ரழியல்லாஹு அன்ஹு ஆகியோர் காலத்தில் இரண்டு பாங்குகள் கிடையாது. உதுமான் ரழியல்லாஹு அன்ஹு அவர்கள்தான் இந்த இரண்டாவது பாங்கை நடைமுறைக்கு கொண்டு வந்தார்கள். இதனை அக்காலத்தில் வாழ்ந்த ஸஹாபாக்கள் ஏகோபித்துஒத்த கருத்துடன் ஏற்றுக்கொண்டனர். எவரும் ஆட்சேபனை செய்யவில்லை.
உதுமான் ரழியல்லாஹு அன்ஹு அவர்களின் இச்செயலை குறை காண்பவன் அவன் உஸ்மான் ரழியல்லாஹு அன்ஹு அவர்களை மட்டுமல்ல அதன் மூலம் அண்ணல் நபி ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம் அவர்களையே குறை காண்பவனாகின்றான்.
இன்றைக்கு புதுக் கொள்கைக்காரர்கள் குர்ஆனையும்ஹதீதையும் எடுத்துக்கொண்டு அவற்றுக்கு தவறான விளக்கங்களைத் தந்துபொதுமக்களை குழப்பத்தில் ஆழ்த்துகின்றனர்.
இதனைக் குறித்து அண்ணல் நபி ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம் அவர்கள் சொன்னார்கள்பிற்காலத்தில் வாழ்பவர்கள் அனேக அபிப்பிராய பேதங்களை சந்திப்பர்அந்நேரத்தில் என்னுடையவும்,நேர்வழிபெற்ற கலீபாக்களுடையவும் வழிமுறைகளை நீங்கள் பின்பற்றிச் செல்லுங்கள்அதனை உறுதியாகப் பற்றிப் பிடித்துகடைவாய்ப் பற்களினால் கடித்துப் பிடித்துக் கொள்ளுங்கள்“.
அறிவிப்பவர் இர்பாளு இப்னு ஸாரியா,
நூல் : அபூதாவூதுதிர்மிதிஇப்னு மாஜா
இன்றைய சூழலின் அவல நிலை குறித்து அண்ணல் நபி ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம் அவர்களின் முன்னறிவிப்பு இதுஎனவேஸஹாபாக்களின் வழிமுறைகளைப் பின்பற்றி ஒழுகுவது நம்மீது கடமை!
ஆக நபி பெருமானார் ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம் அவர்களுடையவும்,ஸஹாபாக்களுடையவும் வழிமுறைகளை விமர்சனம் செய்யாமல் ஏற்றுக் கொண்டுகொள்கை அடிப்படையில் இமாம் அபூமூஸா அல்அஷ்அரி ரழியல்லாஹு அன்ஹு அவர்கள்இமாம் அபூமன்ஸுர் அல்மாதுரிதி ரழியல்லாஹு அன்ஹு அவர்கள் ஆகிய இருவரில் ஒருவரையும்சட்டத் துறையில் இமாம் அபூஹனீபா ரஹ்மத்துல்லாஹி அலைஹி அவர்கள்இமாம் மாலிக் ரஹ்மத்துல்லாஹி அலைஹி அவர்கள்இமாம் ஷாபிஈ ரஹ்மத்துல்லாஹி அலைஹி அவர்கள்இமாம் அஹ்மது இப்னு ஹம்பல் ரஹ்மத்துல்லாஹி அலைஹி அவர்கள் ஆகிய நால்வரில் ஒருவரையும் பின்பற்றி ஷரீஅத்தின் அழகிய பாதையில் நடப்பவர்கள் தாம் அஹ்லுஸ் ஸுன்னத் வல்ஜமாஅத்தினர்.
நபிகளாரும் தோழர்களும் கற்றுத்தந்த ஷரீஅத்தின் வழிமுறைகளை கட்டிக்காப்பது மத்ஹபுகள்தான் என்பதில் ஐயமிருக்க முடியாதுமத்ஹபை விலக்கி வைத்துவிட்டு ஷரீஅத்தின்படி நடப்பது என்பது சாத்தியமற்றதுஏனெனில் மத்ஹபுகளின் துணையின்றிச் சென்றால் ஷரீஅத்திலிருந்து வெளியேறிவிட ஏதுவாகும். “மத்ஹபுகள் தேவையற்றவை“ என்போரின் இன்றைய நிலையும் இதுதான்.
நவீன வாதிகளுடன் ஸுன்னத் வல்ஜமாஅத்தினர் நடத்திவரும் கொள்கைப் போராட்டம் இன்று நேற்று தொடங்கியதல்லஸஹாபாக்களின் காலத்திலேயே இவர்கள் காரிஜிய்யாகத்ரிய்யாமுஃதஸிலா என்ற பெயரில் தோன்றினர்எனினும்சுன்னத் வல் ஜமாஅத்தின் பெருமைக்குரிய மேதைகள் அவர்களுடன் கொள்கைப் போர்புரிந்து அவர்களது குழப்பவாதங்களுக்கு பதிலடி தந்தனர்இன்றும் இந்நிலை தொடர்கிறது.
அல்லாஹ்வின் ஏவலை நிலை நிறுத்தக் கூடிய ஒரு கூட்டத்தினர் எனது சமுதாயத்தில் என்றுமிருப்பர்.மாறு செய்வோர் அவர்களுக்கு எந்தத் தீங்கையும் விளைவித்துவிட முடியாதுஇவர்கள் வெளிப்படையாவே இருப்பர். (இவர்களே வெற்றி பெறக் கூடியவர்கள்)“ நபிமொழி.
அறிவிப்பவர் தௌபான் ரழியல்லாஹு அன்ஹு,

நூல்:முஸ்லிம்பாகம் - 02, பக்கம் - 143

No comments:

Post a Comment