بسم الله الرحمن الرحيم
ஹஜ்ஜின் சிறப்பும்,
ஹாஜிகள் பேண வேண்டிய ஒழுக்கங்களும்
ذو القعدة -12 - 2015-08-28
உலகில் ஒவ்வொரு மதத்தவருக்கும் புண்ணியத் தலங்கள் உள்ளன. ஆனால் அவைகளுக்கும் இஸ்லாமியர்களின் புண்ணியத் தலமான கஃபாவிற்கும் நிறைய வேறுபாடு உண்டு. மற்ற மதத்தவர்கள் புண்ணியமாக கருதும் இடங்களுக்கு ஏதாவது ஒரு வருடத்தில் அவர்களில் யாருமே செல்லா விட்டால் அதனால் உலகம் அழிந்து விடாது. ஆனால் சங்கை மிக்க கஃபாவை ஏதாவது ஒரு வருடத்தில் முஸ்லிம்களில் யாருமே சந்திக்கச் செல்லா விட்டால் உலகம் அழிந்து விடும்
عَنْ عَيَّاشِ بْنِ أَبِي رَبِيعَةَ الْمَخْزُومِيِّ قَالَ قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ لَا تَزَالُ هَذِهِ الْأُمَّةُ بِخَيْرٍ مَا عَظَّمُوا هَذِهِ الْحُرْمَةَ حَقَّ تَعْظِيمِهَا فَإِذَا ضَيَّعُوا ذَلِكَ هَلَكُوا (ابن ماجة- بَاب فَضْلِ مَكَّة قَالَ اِبْن عَبَّاس لَوْ لَمْ يَحُجّ النَّاس هَذَا الْبَيْت لَأَطْبَقَ اللَّه السَّمَاء عَلَى الْأَرْض (تفسير ابن كثير)
மற்றவர்களின் எந்த ஒரு ஆலயமும் உலகம் தோன்றியதில் இருந்தே கண்ணியப்படுத்தப்பட்டதாக இல்லை. முஸ்லிம்களின் புண்ணியத் தலமான மக்கா உலகம் தோன்றியதில் இருந்தே கண்ணியமாக்கப்பட்டுள்ளது
عَنْ صَفِيَّةَ بِنْتِ شَيْبَةَ قَالَتْ سَمِعْتُ النَّبِيَّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ يَخْطُبُ عَامَ الْفَتْحِ فَقَالَ يَا أَيُّهَا النَّاسُ إِنَّ اللَّهَ حَرَّمَ مَكَّةَ يَوْمَ خَلَقَ السَّمَوَاتِ وَالْأَرْضَ فَهِيَ حَرَامٌ إِلَى يَوْمِ الْقِيَامَةِ (ابن ماجة)
மக்காவில் விளையும் ஒவ்வொரு புற்பூண்டுகளுக்கும் பாதுகாப்பு.
عَنْ ابْنِ عَبَّاسٍ رضي الله عنه أَنَّ النَّبِيَّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ إِنَّ اللَّهَ حَرَّمَ مَكَّةَ فَلَمْ تَحِلَّ لِأَحَدٍ قَبْلِي وَلَا تَحِلُّ لِأَحَدٍ بَعْدِي وَإِنَّمَا أُحِلَّتْ لِي سَاعَةً مِنْ نَهَارٍ لَا يُخْتَلَى خَلَاهَا وَلَا يُعْضَدُ شَجَرُهَا وَلَا يُنَفَّرُ صَيْدُهَا وَلَا تُلْتَقَطُ لُقَطَتُهَا إِلَّا لِمُعَرِّفٍ وَقَالَ الْعَبَّاسُ يَا رَسُولَ اللَّهِ إِلَّا الْإِذْخِرَ لِصَاغَتِنَا وَقُبُورِنَا فَقَالَ إِلَّا الْإِذْخِرَ وَعَنْ خَالِدٍ عَنْ عِكْرِمَةَ قَالَ هَلْ تَدْرِي مَا لَا يُنَفَّرُ صَيْدُهَا هُوَ أَنْ يُنَحِّيَهُ مِنْ الظِّلِّ يَنْزِلُ مَكَانَهُ (بخاري) باب لاَ يُنَفَّرُ صَيْدُ الْحَرَمِ جزاء الصيد
அல்லாஹ் மக்காவை புனிதப் படுத்தியிருக்கிறான். எனக்கு முன்னர் எவருக்கும் அதில் போர் செய்வது அனுமதிக்கப்பட்டிருக்கவில்லை. எனக்குப் பின் வேறு எவருக்கும் அனுமதிக்கப்படாது. எனக்குக் கூட பகலில் சிறிது நேரமே அனுமதிக்கப்பட்டது எனவே இங்குள்ள புற்பூண்டுகளை பறிக்கக்கூடாது. இங்குள்ள மரங்களை வெட்டக்கூடாது இங்குள்ள வேட்டைப் பிராணிகளை விரட்டக்கூடாது. இங்கே கீழே விழுந்து கிடக்கும் பொருளை அதை அறிவிப்புச் செய்து உரியவரிடம் சேர்ப்பவரைத் தவிர மற்றவர்கள் அதை எடுக்கக்கூடாது என்று நபி ஸல் கூறினார்கள் அப்போது என் தந்தை அப்பாஸ் ரழி அவர்கள் அல்லாஹ்வின் தூதரே எங்களின் கப்ருகளுக்கும், உலோகத் தொழிலாளர்களுக்கும் பயன்படுகிற இத்கிர் என்ற வாசனைப் புல்லைத் தவிரவா? என்று கேட்க, அதற்கு நபி ஸல் அவர்கள் ஆம் இத்கிர் புல்லைத் தவிர.. என்றார்கள். வேட்டைப் பிராணியை விரட்டக் கூடாது என்பதன் பொருள் என்ன தெரியுமா? நிழலில் படுத்திருக்கும் அதை எழுப்பி விட்டு அந்த இடத்தில் தங்குவது என்று அறிவிப்பாளர் இக்ரிமா ரழி அவர்கள் காலித் இப்னு மஹ்ரான் அவர்களிடம் கூறினார்கள் - புகாரீ-1833
நிழலில் படுத்திருக்கும் அதை எழுப்பி விடுவதும் கூடாது என்னும் அளவுக்கு புனித ஹரம் எல்லையில் பிராணிகளின் பாதுகாப்பு
உலகில் தோன்றிய அனைத்து நபிமார்களும் தவாஃப் செய்த கஃபா..
عَنْ قَتَادَة:وَضَعَ اللَّه الْبَيْت مَعَ آدَم أَهَبَطَ اللَّهُ آدَمَ إِلَى الْأَرْض وَكَانَ مُهْبَطه بِأَرْضِ الْهِنْد وَكَانَ رَأْسه فِي السَّمَاء وَرِجْلَاهُ فِي الْأَرْض فَكَانَتْ الْمَلَائِكَة تَهَابهُ فَنَقَصَ إِلَى سِتِّينَ ذِرَاعًا فَحَزِنَ آدَم إِذْ فَقَدَ أَصْوَات الْمَلَائِكَة وَتَسْبِيحهمْ فَشَكَا ذَلِكَ إِلَى اللَّه عَزَّ وَجَلَّ فَقَالَ اللَّه يَا آدَم إِنِّي قَدْ أَهْبَطْت لَك بَيْتًا تَطُوف بِهِ كَمَا يُطَاف حَوْل عَرْشِي وَتُصَلِّي عِنْده كَمَا يُصَلَّى عِنْد عَرْشِي فَانْطَلَقَ إِلَيْهِ آدَم فَخَرَجَ وَمُدَّ لَهُ فِي خَطْوه فَكَانَ بَيْن كُلّ خُطْوَتَيْنِ مَفَازَة4 فَلَمْ تَزَلْ تِلْكَ الْمَفَازَة بَعْد ذَلِكَ فَأَتَى آدَم الْبَيْت فَطَافَ بِهِ وَمَنْ بَعْده مِنْ الْأَنْبِيَاء (تفسير ابن كثير)
அவர்களின் ஒவ்வொரு எட்டும் தூரமாக இருந்தது. ஒவ்வொரு எட்டு எடுத்து வைக்கும்போதும் அங்கே ஒரு ஊர் உருவானது
عن ابن عباس رضي الله عنهما قال قال رسول الله صلى الله عليه و سلم إنّ الله تعالى يُنْزِلُ على أهلِ هذا المَسْجِدِ مَسْجِدِ مَكَةَ في كلِّ يَوْمٍ ولَيْلَةٍ عِشْرِينَ ومِائَةَ رَحمَةٍ سِتِّينَ لِلطَّائِفِينَ وأربَعِينَ لِلْمُصَلِّينَ وعِشْرِينَ لِلنّاظِرِينَ - رواه البيهقي بإسناد حسن -عَنْ ابْنِ عَبَّاسٍ رضي الله عنه أَنَّ النَّبِيَّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ الطَّوَافُ حَوْلَ الْبَيْتِ مِثْلُ الصَّلَاةِ إِلَّا أَنَّكُمْ تَتَكَلَّمُونَ فِيهِ فَمَنْ تَكَلَّمَ فِيهِ فَلَا يَتَكَلَّمَنَّ إِلَّا بِخَيْرٍ(ترمذي)
ஹஜருல் அஸ்வத் கல்லின் சிறப்பு
عَنْ ابْنِ عَبَّاسٍ رضي الله عنهما قَالَ قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ فِي الْحَجَرِ وَاللَّهِ لَيَبْعَثَنَّهُ اللَّهُ يَوْمَ الْقِيَامَةِ لَهُ عَيْنَانِ يُبْصِرُ بِهِمَا وَلِسَانٌ يَنْطِقُ بِهِ يَشْهَدُ عَلَى مَنْ اسْتَلَمَهُ بِحَقٍّ (ترمذي) عن عبد الله بن عمرو بن العاص رضي الله عنهماقال:سمعتُ رسولَ الله صلى الله عليه وسلم يقول :إنَّ الرُّكْنَ والمقامَ ياقُوتَتَانِ من ياقوتِ الجَنَّةِ طَمَسَ الله نُورَهُما ولو لم يَطْمِسْ نورَهُما لأضَاءتا ما بين المَشْرِقِ والمغْرِبِ (ترمذي)
சஃபா, மர்வா இடையில் சயீ செய்வதின் சிறப்பு
إِنَّ الصَّفَا وَالْمَرْوَةَ مِنْ شَعَائِرِ اللَّهِ فَمَنْ حَجَّ الْبَيْتَ أَوِ اعْتَمَرَ فَلَا جُنَاحَ عَلَيْهِ أَنْ يَطَّوَّفَ بِهِمَا وَمَنْ تَطَوَّعَ خَيْرًا فَإِنَّ اللَّهَ شَاكِرٌ عَلِيمٌ (158البقرة)
சயீ செய்யுங்கள் என்று சொல்வதற்கு பதிலாக சயீ செய்வது குற்றமில்லை என்று அல்லாஹ் கூறுவதின் காரணம்
ذَكَرَ مُحَمَّد بْن إِسْحَاق فِي كِتَاب السِّيرَة أَنَّ إِسَافًا وَنَائِلَة كَانَا بَشَرَيْنِ فَزَنَيَا دَاخِل الْكَعْبَة فَمُسِخَا حَجَرَيْنِ فَنَصَبَتْهُمَا قُرَيْش تُجَاه الْكَعْبَة لِيَعْتَبِر بِهِمَا النَّاسُ فَلَمَّا طَالَ عَهْدهمَا عُبِدَا ثُمَّ حُوِّلَا إِلَى الصَّفَا وَالْمَرْوَة فَنُصِبَا هُنَالِكَ فَكَانَ مَنْ طَافَ بِالصَّفَا وَالْمَرْوَة يَسْتَلِمهُمَا-وَقَالَ الشَّعْبِيّ:كَانَ إِسَاف عَلَى الصَّفَا وَكَانَتْ نَائِلَة عَلَى الْمَرْوَة وَكَانُوا يَسْتَلِمُونَهُمَا فَتَحَرَّجُوا بَعْد الْإِسْلَام مِنْ الطَّوَاف بَيْنهمَا فَنَزَلَتْ هَذِهِ الْآيَة (تفسير ابن كثير)
மக்காவில் கிடைக்கும் ஜம்ஜம் நீரின் சிறப்பைப் போன்று உலகின் எந்த ஒரு நீருக்கும் சிறப்பு இல்லை
عَنِ ابْنِ عَبَّاسٍ رضي الله عنه قَالَ قَالَ رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم مَاءُ زَمْزَمَ لِمَا شُرِبَ لَهُ إِنْ شَرِبْتَهُ تَسْتَشْفِى بِهِ شَفَاكَ اللَّهُ وَإِنْ شَرِبْتَهُ لِشِبَعِكَ أَشْبَعَكَ اللَّهُ بِهِ وَإِنْ شَرِبْتَهُ لِقَطْعِ ظَمَئِكَ قَطَعَهُ وَهِىَ هَزْمَةُ جِبْرِيلَ5 وَسُقْيَا اللَّهِ إِسْمَاعِيلَ (دار قطني
ஜம்ஜம் நீர்அற்பதமான நீர். மாற்று மதத்தவர்கள், இஸ்லாத்தை விளங்க இதை சிந்தித்தால் போதும்
இந்தக் கிணறு 18 அடி அகலமும் 14 அடி நீளமும் கொண்டதாகும். இதில் தண்ணீரின் ஆழம் எப்போதும் சுமார் ஐந்து அடியாகும். இந்தக் கிணற்றில் இருந்து ஒவ்வொரு விநாடியும் தண்ணீர் இறைக்கப்பட்டுக் கொண்டே உள்ளது. வருடத்தின் எல்லா நாட்களிலும் மக்கள் அங்கே குழுமுகிறார்கள். ஹஜ் காலத்திலும் ரமலான் மாதத்திலும் சுமார் 20 லட்சம் மக்கள் அங்கே குழுமுகிறார்கள். அனைவருக்கும் இந்தக் கிணற்றில் இருந்து தான் குடிநீர் வினியோகிக்கப்படுகிறது. ஒவ்வொருவரும் 20 லிட்டருக்குக் குறையாமல் அந்தத் தண்ணீரைத் தமது சொந்த ஊருக்கும் எடுத்துச் செல்கிறார்கள். குறைந்த ஆளம் உள்ள இந்தக் கிணறு, பாலைவனத்தில் அமந்துள்ள இந்தக் கிணறு, அருகில் ஏரிகளோ கண்மாய்களோ குளம் குட்டைகளோ இல்லாத அந்தக் கிணற்றில் இருந்து எப்படி லட்சோப லட்சம் மக்களுக்கு தண்ணீர் வழங்கப்படுகிறது என்பது முதலாவது அற்புதம். எந்த ஊற்றாக இருந்தாலும் சில வருடங்களிலோ பல வருடங்களிலோ செயலிழந்து போய் விடும். ஆனால் இந்த ஊற்று பல ஆயிரம் ஆண்டுகளாக வற்றாமல் இருப்பது இரண்டாவது அற்புதம். எந்த ஒரு நீர் நிலையாக இருந்தாலும் பாசி படிந்து போவதும் கிருமிகள் உற்பத்தியவதும் இயற்கை. இதனால் தான் குளோரின் போன்ற மருதுகள் நீர் நிலைகளில்கலக்கப்படுகின்றன. ஆனால் ஜம்ஜம் தண்ணீரில் அது உற்பத்தியான காலம் முதல் இன்று வரை எந்த மருதுகள் மூலமும் அது பாதுக்காக்கப்படாமல் தன்னைத் தானே பாதுகாத்துக் கொள்வது மூன்றாவது அற்புதமாகும். மருந்துகளால் பாதுகாக்கப்படாத தண்ணீர் குடிப்பதற்கு ஏற்றதாக இருக்காது என்பது அறிவியலின் முடிவாகும். ஆனால் இந்தத் தண்ணீர் 1971 ஆம் ஆண்டு ஐரோப்பிய சோதனைச் சாலையில் சோதித்துப் பார்க்கப்பட்ட போது இது குடிப்பதற்கு மிகவும் ஏற்ற நீர் என்று நிருபிக்கப்பட்டது. பொதுவாக மற்ற நீரில் இருந்து ஜம்ஜம் தண்ணீர் வேறுபட்டுள்ளதும் சோதனையில் தெரிய வந்துள்ளது. கால்ஷியம் மற்றும் மேக்னீஷியம் எனும் உப்பு மற்ற வகை தண்ணீரை விட ஜம்ஜம் தண்ணீரில் அதிகமாக உள்ளது. இந்த உப்புக்கள் புத்துணர்ச்சியைக் கொடுக்கக் கூடியவை. இதை அனுபவத்தில் உணரலாம். மேலும் இந்தத் தண்ணீரில் ஃபுளோரைடு உள்ளது. இது கிருமிகளை அழிக்க வல்லது. அங்கே அற்புதம் நடக்கிறது இங்கே அற்புதம் நடக்கிறது என்றெல்லாம் பலவாறான நம்பிக்கை மக்கள் மத்தியில் நிலவுகிறது. அது போல் இதையும் கருதக் கூடாது. மற்ற அற்புதங்கள் எல்லாம் எந்த சோதனைக்கும் உட்படுத்தப்படாதவை. நிரூபிக்கப்படாமல் குருட்டு நம்பிக்கையை அடிப்படையாகக் கொண்டவை. ஆனால் தினசரி 20 லட்சம் மக்களுக்கு அந்தத் தண்ணீர் குடி நீராகப் பயன்படுவதும், பாலைவனத்தில் இந்த அதிசயம் பல்லாயிரம் ஆண்டுகள் நடந்து வருவதும் எல்லாவித சோதனைக்கும் உட்படுத்தப்பட்டு நிரூபிக்கப்பட்டு உள்ளதால் இது மெய்யான அற்புதமாகும். இது போன்ற அற்புதம் உலகில் இது ஒன்று தான் என்பதில் சிறிதும் சந்தேகம் இல்லை.
1971 ஆண்டில் எகிப்து நாட்டின் ஒரு டாக்டர் ஐரோப்பிய பிரசுரத்திற்கு ஜம்ஜம் நீர் குடிப்பதற்கு உகந்ததல்ல என்ற அடிப்படையில் ஒரு செய்தியைக் கொடுத்தார். கஃபத்துல்லா, தாழ்வு பகுதியான மக்காவின் நடு மையத்தில் உள்ளதால் மக்காவின் கழிவு நீர் ஒன்று சேர்ந்து கிணற்றில் விழுவதாக அவரது யூகம் இருந்தது மன்னர் பைசல் அந்த எகிப்திய டாக்டரின் கூற்றை பொய் என நிருபிக்க முடிவெடுத்தார் ஸம்ஸம் நீரை ஐரோப்பிய சோதனைச்சாலைக்கு அனுப்பி இந்த நீர் குடிப்பதற்கு உகந்ததா என்பதை ஆராயச் சொன்னார். அப்படி ஆராய்ந்த பிறகு ஐரோப்பிய சோதனைச் சாலைகள் இந்த நீர் குடிப்பதற்கு உகந்தது தான் என்ற சான்று அளித்தன. எனவே அந்த எகிப்து மருத்துவர் குறிப்பிட்டது பொய் என்று நிருபிக்கப் பட்டது.
ஜம்ஜம் நீரை அருந்தும் முறை
عَنْ مُحَمَّدِ بْنِ عَبْدِ الرَّحْمَنِ بْنِ أَبِي بَكْرٍ قَالَ كُنْتُ عِنْدَ ابْنِ عَبَّاسٍ جَالِسًا فَجَاءَهُ رَجُلٌ فَقَالَ مِنْ أَيْنَ جِئْتَ قَالَ مِنْ زَمْزَمَ قَالَ فَشَرِبْتَ مِنْهَا كَمَا يَنْبَغِي قَالَ وَكَيْفَ قَالَ إِذَا شَرِبْتَ مِنْهَا فَاسْتَقْبِلْ الْقِبْلَةَ وَاذْكُرْ اسْمَ اللَّهِ وَتَنَفَّسْ ثَلَاثًا وَتَضَلَّعْ مِنْهَا فَإِذَا فَرَغْتَ فَاحْمَدْ اللَّهَ عَزَّ وَجَلَّ فَإِنَّ رَسُولَ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ إِنَّ آيَةَ مَا بَيْنَنَا وَبَيْنَ الْمُنَافِقِينَ إِنَّهُمْ لَا يَتَضَلَّعُونَ مِنْ زَمْزَمَ (ابن ماجة)وَتَضَلَّعْ مِنْهَا أي أكثر من الشرب حتى يمتلئ جنبك وأضلاعك -عَنْ عِكْرِمَةَ قَالَ كَانَ ابْنُ عَبَّاسٍ إِذَا شَرِبَ مِنْ زَمْزَمَ قَالَ اللَّهُمَّ إِنِّى أَسْأَلُكَ عِلْمًا نَافِعًا وَرِزْقًا وَاسِعًا وَشِفَاءً مِنْ كُلِّ دَاءٍ (دار قطني)
ஜம்ஜம் நீரை நின்று அருந்துவது கூடுமா ?
عَنْ ابْنِ عَبَّاسٍ رضي الله عنه أَنَّ رَسُولَ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ شَرِبَ مِنْ زَمْزَمَ وَهُوَ قَائِمٌ (مسلم) عن أَبي هُرَيْرَةَ رضي الله عنه قال قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ لَا يَشْرَبَنَّ أَحَدٌ مِنْكُمْ قَائِمًا فَمَنْ نَسِيَ فَلْيَسْتَقِئْ (مسلم) وَالصَّوَاب فِيهَا أَنَّ النَّهْي مَحْمُول عَلَى كَرَاهَة التَّنْزِيه وَأَمَّا شُرْبه قَائِمًا فَبَيَان لِلْجَوَازِ (شرح النووي)
ஹாஜியின் சிறப்பு. ஹஜ்ஜுக்குப் புறப்படும்போது மற்றவர்களின் துஆவை வேண்டுகின்ற ஹாஜி, தன் ஹஜ்ஜை முடித்து விட்டுத் திரும்பும்போது அவருடைய துஆவிற்காக மற்றவர்கள் காத்திருக்கும் நிலைக்கு உயருகிறார்.
عَنْ أَبِي هُرَيْرَةَ رَضِيَ اللَّهُ عَنْهُ قَالَ قَالَ النَّبِيُّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ مَنْ حَجَّ هَذَا الْبَيْتَ فَلَمْ يَرْفُثْ وَلَمْ يَفْسُقْ رَجَعَ كَيَوْمِ وَلَدَتْهُ أُمُّهُ (بخاري)
உளத்தூய்மையுடன் கூடிய ஹஜ்ஜுக்கு மட்டுமே இந்தச் சிறப்பு கிடைக்கும். ஹஜ்ஜில் உளத்தூய்மை மிக அவசியம்.
ஹஜ் கடமையைப் பற்றி கூறப்படும் வசனம் லில்லாஹி என்று தான் துவங்குகிறது.
உளத்தூய்மை இல்லாமல் ஹஜ் செய்பவர்களின் எண்ணிக்கை கடைசி காலத்தில் பெருகும் என்பதைப் பற்றியும்
وَلِلَّهِ عَلَى النَّاسِ حِجُّ الْبَيْتِ مَنِ اسْتَطَاعَ إِلَيْهِ سَبِيلًا (97ال عمران) عن أنس رضي الله عنه قال قال رسول الله صلي الله عليه وسلم يأتي على الناس زمان يحج أغنياء الناس للنزاهة وأوساطهم للتجارة وفقراؤهم للمسألة وقراؤهم للسمعة والرياء (كنز العمال)
தன்னுடைய அமலைப்பற்றி தானே பெருமைப்பட்டுக் கொள்வது மனிதனை நாசமாக்கும் செயல்களில் ஒன்றாகும்
عَنْ أَنَسٍ قَالَ: قَالَ رَسُولُ اللهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ: " ثَلَاثٌ مُهْلِكَاتٌ شُحٌّ مُطَاعٌ وَهَوًى مُتَّبَعٌ وَإِعْجَابُ الْمَرْءِ بِنَفْسِهِ، وَثَلَاثٌ مُنْجِيَاتٌ خَشْيَةُ اللهِ فِي السِّرِّ وَالْعَلَانِيَةِ، وَالْقَصْدَ فِي الْغِنَى وَالْفَقْرِ، وَكَلِمَةُ الْحَقِّ فِي الرِّضَا وَالْغَضَبِ (بيهقي)
ஹாஜியிடம் நமது ஹஜ்ஜை அல்லாஹ் ஏற்றுக் கொள்வான் என்ற ஆதரவும், அதே நேரத்தில் நம்முடைய ஹஜ் ஏற்றுக் கொள்ளப்படாமல் ஆகி விடுமோ என்ற அச்சமும் இருக்க வேண்டும். இத்தகையவர் தன் அமலைப் பற்றி பெருமைப்பட மாட்டார்
تَتَجَافَى جُنُوبُهُمْ عَنِ الْمَضَاجِعِ يَدْعُونَ رَبَّهُمْ خَوْفًا وَطَمَعًا وَمِمَّا رَزَقْنَاهُمْ يُنْفِقُونَ (السجدة16) وَادْعُوهُ خَوْفًا وَطَمَعًا (56الاعراف) عَنْ سَعِيدِ بْنِ الْمُسَيِّبِ أَنَّ عُمَرَ بْنَ الْخَطَّابِ رَضِيَ اللهُ عَنْهُ اشْتَكَى فَدَخَلَ عَلَيْهِ النَّبِيُّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ يَعُودُهُ فَقَالَ: كَيْفَ تَجِدُكَ يَا عُمَرُ ؟ فَقَالَ:أَرْجُو وَأَخَافُ فَقَالَ رَسُولُ اللهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ:مَا اجْتَمَعَ الرَّجَاءُ وَالْخَوْفُ فِي قَلْبِ مُؤْمِنٍ إِلَّا أَعْطَاهُ اللهُ الرَّجَاءَ وَأَمَّنَهُ الْخَوْفَ (شعب الايمان للبيهق